மக்களவை தேர்தல்: அதிகம் அறியப்படாத அரிய தகவல்கள் - 1

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 05:27 pm
special-article-about-loksabha-election-part-1

 
நம் நாட்டின் முதல் மக்களவை தேர்தல், 1951 -52ம் ஆண்டுகளில் நடைபெற்றது. அதாவது, 25 அக்டோபர், 1951ல் துவங்கிய தேர்தல், 21 பிப்ரவரி, 1952 வரை நீடித்தது, 

அதில், முக்கிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் சாேசியலிஸ்ட் கட்சிகள், வேட்பாளர்களை களம் இறக்கின. இது தவிர, பல சிறிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டன. 

அப்போது, மாெத்தமிருந்த, 489 தொகுதிகளில், 245 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதில், 479 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 364 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன், மத்தியில் ஆட்சி அமைத்தது. 

அந்த தேர்தலில், மாெத்தம், 10 கோடியே 59 லட்சத்து 44 ஆயிரம் ஓட்டுகள் பதிவாகின. அதில், காங்கிரஸ் கட்சி, 44.99 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. அதாவது, அந்த கட்சிக்கு மட்டும், 4 கோடியே, 76 லட்சத்து 65 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. 


இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான பாரதிய ஜனசங்கம், நாட்டின் முதல் தேர்தலில், 94 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மாெத்தம் பதிவான ஓட்டுகளில், 32 லட்சத்து, 32 லட்சத்து 46 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது. இது வெறும், 3.06 சதவீதம் ஆகும். 

காங்கிரஸ் கட்சி, மாெத்தம் 4 இடங்களில் டெபாசிட் இழந்தது. பாரதிய ஜன சங்கமோ, அது போட்டியிட்ட, 49 இடங்களில், அதாவது, 50 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. 

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வெற்றி சதவீதம், 75 ஆகவும், பாரதிய ஜனசங்கத்தின் வெற்றி சதவீதம், வெறும் 3 ஆகவும் இருந்தது. 

காங்கிரசுக்கு அடுத்தபடியாக, ஒரு கோடியே, 12 லட்சத்து 66 ஆயிரம் ஓட்டுகள் பெற்ற சாேசியலிஸ்ட் கட்சி, வெறும், 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

அதே சமயம், 38 லட்சத்து, 84 ஆயிரம் ஓட்டுகள் பெற்ற சி.பி.ஐ., 16 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரசுக்கு அடுத்தபடியாக, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அந்தஸ்த்தை பெற்றது. 

இந்த தேர்தலில், சுயேட்சை வேட்பாளர்கள், 37 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள், ஒரு கோடியே, 68 லட்சம் ஓட்டுகளுடன், மாெத்தம் பதிவான ஓட்டுகளில், 15 சதவீதத்தை பெற்றிருந்தனர். 

நாடு சுதந்திரம் அடைந்த பின் நடைபெற்ற முதல் மக்களவை தேர்தல் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில், பல கட்சிகள், பல சுயேட்சைகள் போட்டியிட்டாலும், காங்கிரஸ் கட்சி, மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. கிட்டத்தட்ட, 45 சதவீத ஓட்டுகளை பெற்று, மிக பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்திருந்தது. 

அதற்கு அடுத்தடுத்த தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தினாலும், பிற கட்சிகளும் மெல்ல மெல்ல எழுச்சி பெறத்துவங்கின.  

முழு நிலவாய் பிரகாசித்த காங்கிரஸ், பவுர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை நிலவாய் மெல்ல தேயத் துவங்கியது. நாட்டில் இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்கள், அவற்றில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை, அடுத்து வரும் கட்டுரைகளில் காணலாம். 

தொடரும்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close