மக்களவை தேர்தல்: அதிகம் அறியப்படாத அரிய தகவல்கள் - 2

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 05:27 pm
special-article-about-loksabha-election-part-2

வாக்கு சதவீதம் அதிகரிப்பு...

நாட்டின் இரண்டாவது மக்களவை தேர்தல், 1957ம் ஆண்டு நடைபெற்றது, இதில், 494 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 248 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை இருந்தது. 

இந்த தேர்தலில், 490 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 371 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் பதிவான ஓட்டுகளில், 47.78 சதவீத ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. 

இதற்கு அடுத்தபடியாக, 10.9 சதவீத ஓட்டுகள் பெற்ற பிரஜா சோசியலிஸ்ட் கட்சி, 19 இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம், வெறும், 8.92 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற்ற சி.பி.ஐ., 27 இடங்களை கைப்பற்றியது. 

கடந்த தேர்தலில், 3 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனசங்கம், இந்த தேர்தலில், 130 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 4 இடங்களில் வெற்றி பெற்றது; 57 இடங்களில் டெபாசிட் இழந்தது. அந்த கட்சிக்கு, இம்முறை, 5.97 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 5 கோடியே 75 லட்சம் ஓட்டுகள் பெற்ற நிலையில், பாரதிய ஜனசங்கத்திற்கு, 71 லட்சத்து 93 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. 

கடந்த தேர்தலை விட, இம்முறை, ஜனசங்கத்திற்கு, 2 சதவீதம் அதிக வாக்குகள் கிடைத்தன. அதே சமயம், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கவே செய்திருந்தது. 

இந்த தேர்தலில், சுயேட்சை வேட்பாளர்கள், 19 சதவீத ஓட்டுகள் பெற்று, 41 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். 

தொடரும்...

*தரவுகள் உதவி: சுந்தரம்.நாகராஜன்,தேர்தல் கள ஆய்வாளர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close