ஜனநாயகத்தின் காவலர் காங்கிரஸ்...?

  பாரதி பித்தன்   | Last Modified : 13 Apr, 2019 12:45 pm
is-congress-securing-democracy

இந்தியாவில் காலாவதியான பல சட்டங்கள் அமலில் இருந்தன. அதனால் நாட்டின் வளர்ச்சி மட்டும் அல்லாமல் தனி மனிதனுக்கும் அது தொல்லையாக இருந்தது. அப்படி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டங்களை தற்போதுள்ள மத்திய அரசு துாக்கி எறிந்தது. காங்கிரஸ் கட்சி தன் பங்கிற்கு ஒரே ஒரு சட்டத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்துள்ளது. அதாவது இந்திய குற்றவியல் சட்டம் 124A பிரிவை மட்டும் ரத்து செய்யப்படும் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களக்கு எவ்விதமான உதவியும் இல்லாவிட்டாலும், தீவிரவாதிகளுக்கு, இந்த தேசவிரோதிகளுக்கு மிகவும் உதவி செய்யும். 

சட்ட பூர்வமாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையும் விரோத உணர்ச்சியை துாண்டி விடுவதற்காக எழுதால், பேச்சால் ஜாடையால் படத்தால் அல்லது வேறு எந்தவிமாகவாவது காரியம் ஆற்றுவது குற்றம். இந்த குற்றத்தை செய்பவர்கள் ஆயுள் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம அல்லது 

3 ஆண்டு சிறைக்காவலும், அபராதமும் விதிக்கலாம் என்று அந்த சட்டம் சொல்கிறது.  விரோதம் என்பது தேச துரோகத்தை குறிக்கும். சட்டத்திற்குட்பட்ட அரசாங்கிதின் செயல்களை குறை கூறுவதும் கண்டிப்பதும் குற்றமாகாது. ஜனநாயக மரபுகளின்படி அரசின் நிர்வாக முறைகளை பற்றி கண்டனம் தெரிவிப்பது குற்றமாகாது. 

இந்த சட்டம் 150 ஆண்டுகளாக இந்தியாவில் அமலில் உள்ளது. இதே சட்டத்தின் இன்னொரு பிரிவு ஆபாசபுத்தகங்கள் விற்பனையை தண்டனைக்குரிய குற்றமாக கூறுகிறது. 

இந்தியாவிற்கு சுந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி, இப்போது தீவிரவாதிகளின் சுதந்திரத்திற்காக பாடுபடப் போவதாக அறிவித்துள்ளது. 

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை ஆளுக்கு ஒரு கொள்கையை சொல்லி தீவிரவாதத்தை பரப்பி வருகின்றனர்.  இந்த சட்டம் அமலானதும் நாட்டிற்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை ராணுவ வீரர்கள் நடவடிக்கை எடுக்க செல்லும் போது கல்வீசி தாக்குதல் நடத்தலாம். அதற்கு கல்லுக்கு 10 ரூபாய் என்று பேசி சம்பளம் வாங்கலாம். வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் கூட இல்லை. 

படிக்க போன இடத்தில் அதை விடுத்து பாகிஸ்தான் ஜிந்தாபாத், சீனா ஜிந்தாபாத் என்று கோஷம் போடலாம். நடவடிக்கை எடுக்க முயன்றால் கருத்து சுந்திரம் பறிபோனது என்று கதறி துடிக்க முடியும். 

கருத்து சுதந்திரம் இப்படி தொடங்கும் போது மக்களுக்கு பிரச்னை ஏற்படாது. ஒரு கட்டத்தில் வீட்டின் உள்ளே வந்து அமர்ந்து ஆடும் போது தான் அதன் பாதிப்பை அறியமுடியும். அப்போது எதுவும் தெரியாமல் போய்விடும்; தமிழர்கள் இந்த சட்டத்தின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியாவதற்கு நம்ம ஊர் தீவிவாதிகள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள். ஆனால் எல்லா பகுதிகளிலும் அப்படி இருப்பதில்லை. ராணுவத்தினர் மீது கல் எறிகிறார்கள், சாலைகளில் கண்ணி வெடி பதித்து குண்டு வெடிக்க செய்து அப்பாவிகள் உயிர் இழப்பதற்கு காரணமாகிறார்கள். இவர்களை மனதில் வைத்து தான் இந்த சட்டத்தை வைத்துக் கொள்வதா நீக்குவதாக என்று முடிவு செய்ய வேண்டும்.

இந்த சட்டம் இருக்கும் போதே கூட பல எழுதாளர்கள், கன்னையாகுமார் போன்றவர்கள் எதிரி நாட்டு துாதுவர்களாக செயல்படுகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் வீதிகள் தோறும் இந்திய எதிர்ப்பாளர்கள் தலைவர்களாக சித்தரிக்கப்படுவார்கள். நாடு பற்றிய விமர்சனம் செய்யும் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும். அதன் பின்னர் அதே விவகாரம் வீட்டின் உள்ளே திரும்பும் அப்போது குத்துதே குடைகிறதே என்று கத்தி பிரயோஜனம் இல்லை. 

தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு யார் ஆள வேண்டும் என்று முடிவு சொல்வது தான். தேர்தலில் தோற்றால் கூட எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்கும். ஆனால் நாட்டின் பாதுகாப்பு பற்றி தவறான முடிவு எடுத்தால் ஆள்வதற்கு மட்டும் அல்ல வாழ்வதற்கு கூட நாடே இருக்காது. இதை இந்த நாட்டைஉயிர்களை பலிதானிகளாக மாற்றி   அடிமைத் தளைகளில் இருந்து மீட்ட காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ள வேண்டும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close