மக்களவை தேர்தல்: அதிகம் அறியாத அரிய தகவல்கள் - 4 இந்திராவும், எமர்ஜென்சியும்!

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 05:27 pm
special-article-about-loksabha-elections-part-4

நாட்டின் முதல் பிரதமர் நேருவின் மகள் இந்திரா பிரதமர் ஆனதும், அவரிடம் மக்கள் அதிகம் எதிர்பார்த்தனர். துணிச்சலான முடிவெடுக்கக் கூடியவர் என்ற பெயர் பெற்ற இந்திரா, இப்படிப்பட்ட துணிச்சல் உடையவர் என அதுவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ஆம்... 1975ம் ஆண்டு, நம் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா. 1977 வரை இரண்டு ஆண்டுகள் நீடித்த எமர்ஜென்சி காலத்தில், பல அதிரடி சம்பவங்கள் அரங்கேறின.

அதன் பின் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததுடன், துணிச்சல் மிக்க பெண் பிரதமர் என பெயர் எடுத்த இந்திராவும் படுதோல்வி அடைந்தார். 

அதன் பின், சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக, காங்கிரஸ் கட்சி அல்லாத மாற்றுக் கட்சித் தலைவர் ஒருவர் பிரதமர் பொறுப்பேற்றார். ஆனால், அந்த ஆட்சியும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.

அதன் பின் வேறொருவர் பிரதமர் ஆனார். ஆனால், அவரது ஆட்சியும், ஓராண்டில் கவிழ்ந்தது. இதையடுத்து, 1980ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, இந்திரா, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்றார். அது முதல், 1984ல் அவர் படுகொலை செய்யப்படும் வரை, இந்திராவே பிரதமராக இருந்தார். 

எமர்ஜென்சி காலத்தில் நிகழ்ந்தது என்ன? இந்திரா தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தார்? அவர் மீண்டும் பிரதமர் ஆவதற்கு இடைப்பட்ட காலத்தில் பிரதமராக இருந்தவர்கள் யார்? அவர் மீண்டும் எப்படி வெற்றி பெற்றார் என்பதற்கான பதிலை அப்போதைய தேர்தல் புள்ளி விபரங்களுடன் அடுத்தடுத்த கட்டுரைகளில் காணலாம்.

தொடரும்...

தரவுகள் உதவி: சுந்தரம்.நகாரஜன், தேர்தல் கள ஆய்வாளர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close