உள்ளாட்சித் தேர்தலை மறந்தது ஏனோ?

  பாரதி பித்தன்   | Last Modified : 15 Apr, 2019 04:08 pm
special-article-about-panchayat-election


இன்னும் 2 நாட்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு, நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்து அவர்களுக்கு நம் விலைமதிப்பற்ற வாக்கை செலுத்தவிருக்கிறோம். 

மக்களவை தேர்தல் முலம் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்களும் சரி, சட்டசபை தேர்தல் முலம் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்களும் சரி, அடித்தட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறவிக்கலாமே தவிர, அதனை செயல்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் தேவை. 

ஆனால் பல ஆண்டுகளாக அது வலுவிழந்தே உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் அதில் இடம் பெற்று பல ஆண்டுகள் கடந்து விட்டன. 
இதன் விளைவு, மக்களவை தேர்தலுக்கு ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர்களிடம், நம்மவர்கள் வைக்கும் கோரிக்கை, சாக்கடை சரியில்லை, தண்ணீர் வரவில்லை. வீதியெல்லாம் சரியில்லை என்பது தான். 

இதனால் தான் அன்புமணி, சீமான், சிதம்பரம் போன்ற தலைவர்கள் பிரச்சாரத்தின் போது நடப்பது மக்களவை தேர்தல் என்று அடிக்கடி நினைவு படுத்துகிறார்கள். 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து, தொகுதி வரையறை செய்து, அனைத்து ஏற்பாற்பாடுகளை முடித்து அமைதியாக ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் தேர்தல் கமிஷன், உள்ளாட்சி தேர்தல் என்றால் சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கிழிக்கிறது. 

அரசியல் கட்சித் தலைவர்களும், முதல்வர், பிரதமர் பதவிகளுக்கான சட்டசபை, மக்களவை தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் தருவது போல்,  உள்ளாட்சி தேர்தல் நடத்துவதைப் பற்றி கவலைப் படுவதில்லை. 

சட்டசபை டிஸ்மிஸ் செய்தால் கூட 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு - காஷ்மீர் போன்ற மாநிலங்களில், அசாத்திய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே, மேலும் 6 மாதங்கள் நீட்டித்துக் கொள்ளலாம். 

ஆனால் உள்ளாட்சிகளுக்கு அது போல வரையரை இருந்தால் கூட அதை எளிதில் வளைத்துக் கொள்ளமுடியும. பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றுவதற்கு முன்பு வரை, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வரை கடன் கிடையாது என்று மக்கள் அறிவிக்கும் நிலைதான் இருந்தது. 

அதன்பின்னர் தொடர்ந்து சில முறை தேர்தல் நடத்தப்பட்டன. தற்போது ஏறக்கட்டி விட்டார்கள். எப்போது தேர்தல் வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. நீதிமன்றத்தில் கூட ஏற்கும் வகையி்ல் சாக்குபோக்கு சொல்லி தள்ளிவிடுகிறார்கள். 
விளைவு, அன்றாடம் காலை எழுவது முதல் இரவு உறங்க செல்வது வரையில் நமக்கு தேவையான எந்த விஷயத்தையும் செய்யல்படுத்த ஆள் இல்லை. 

மக்களவை தேர்தல் முடிந்த பிறகாவது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும். அப்போது தான் பிரச்சாரம், ஓட்டு சேகரிப்பு கூட எளிதாக செய்ய முடியும். அதே போல கட்சியின் கடைக்கோடி தொண்டனுக்கும் பதவி கிடைக்கும். 

மக்களுக்கும் தேவையான வசதிகள் செய்து தர முடியும். 
அவ்வாறு இல்லாவிட்டால், உள்ளாட்சி தேர்தல் நடத்தாத மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல் கிடையாது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பு மட்டும் வெளியானால் ஒரு தலைவர் பதவி காலம் முடியும் முன்பே அடுத்தவர் தயாராக இருப்பார். 

முதல்வர், பிரதமர் போலவே, ஊராட்சி தலைவரும் உடனே பொறுப்பேற்க வேண்டும் என்று சட்ட திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டதோ என தோன்றுகிறது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close