மக்களவை தேர்தல் : அதிகம் அறியப்படாத அரிய நிகழ்வுகள் - 6 ராஜிவ் எழுச்சியும், வீழ்ச்சியும்...

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 02:48 pm
special-article-about-indian-politcs-and-loksabha-elections-part-6

இந்திராவின் மறைவுக்குப் பின், அரவது மகன் ராஜிவ் பிரதமர் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது வெறும், 40 மட்டுமே. இந்தியாவின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்ற இவரின் சிந்தனைகளும் இளமையும், புதுமையுமாகவே இருந்தன. 

ராஜிவ் பிரதமரானதை அடுத்து, சர்வதேச நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஆனாலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, மூத்த தலைவர்கள் சிலர், ராஜிவின் தலைமையை ஏற்க மறுத்தனர்.

அவர்களில் முக்கியமானவர், நரசிம்ம ராவ். பழுத்த அரசியல் அனுமபவம் வாய்ந்த நரசிம்ம ராவ், ராஜிவால், காங்கிரஸ் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார். இது போல் வெளியில் தெரியாமல், பல தலைவர்கள் மட்டம் தட்டப்பட்டனர். இது கட்சி சார்ந்த நடவடிக்கை என்றால், அவரது ஆட்சியிலும் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்தன. 

எதிலும், முன் பின் யோசிக்காமல் தடாலடியாக செய்யும் குணமுடைய ராஜிவ், இலங்கையில் விடுதலை புலிகள் விவகாரத்திலும், எடுத்தோம் கவிழ்த்தாேம் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாகவே, தமிழ் ஈழ போராளிகள் மனதில், ராஜிவ் பற்றிய தவறான அபிப்ராயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, 1989ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி காத்திருந்தது. 

ராஜிவ் அமைச்சரவையில், மூத்த அமைச்சராக இருந்த வி.பி.சிங்., 1989ல் நடைபெற்ற தேர்தலில் அவரை எதிர்த்து களம் கண்டார். வி.பி.,சிங் தலைமையிலான ஜனதாதளம், 143 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு, 197 இடங்களில் வெற்றி கிடைத்தது. எனினும், அந்த இரு கட்சிகளாலும், தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. 

இந்த சுழ்நிலையில் தான், 85 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சியும், 33 இடங்களில் வெற்றி பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,  வி.பி.சிங் பிரதமராக ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, ஜனதா தளத்தை சேர்ந்த வி.பி.சிங், நாட்டின் பிரதமர் ஆனார். 

அவரது ஆட்சி காலத்தில், நாட்டின் பொருளாதாரம் மிக மாேசமான நிலைக்கு சென்றது. அதன் காரணமாக, நாட்டின் தங்கம், சொர்ப்ப தொகைக்கு அடகு வைக்கப்பட்டது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஆட்சிப் பொறுப்பேற்ற வி.பி.சிங்கால், குறிப்பிடத்தக்க அளவு எதையும் சாதிக்க முடியவில்லை. அவரது ஆட்சியும் ஓராண்டுக்குள் முடிவுக்கு வந்தது. 

இதையடுத்து, ஜனதாதளத்தின் பிரிவு அணியாக செயல்பட்ட சந்திரசேகர் பிரதமராவதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவர் எவ்வளவோ முயன்றார். எனினும், தேர்தலை தள்ளிப் போடுவதற்காக மட்டுமே, சந்திரசேகரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேடியது. 

அதன் பிறகு தான் அந்த மாபெரும் துயரச்சம்பவம் நிகழ்ந்தது. யாரும் எதிர்பாராத வகையில், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராகவும், நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றவருவமான ராஜிவ் படுகொலை சம்பவம் அரங்கேறியது. 

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ராஜிவ், மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளாகி உடல் சிதறி பலியானார். இச்சம்பவம், இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 

நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர், அடுத்து  நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர், சர்வ சாதாரணமாக மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளானது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்தது. 

அதன் பின் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை அடுத்து வரும் தொடர்களில் காணலாம்...


தொடரும்...

தரவுகள் உதவி: சுந்தரம்.நகாரகாஜன், தேர்தல் கள ஆய்வாளர்.

newstm.in

மக்களவை தேர்தல் : அதிகம் அறியப்படாத அரிய தகவல்கள் - 1

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close