தெய்வீக மணம் கமழும் சுற்றுலாத்தலம்...திருச்சூர்...!

  இளங்கோ   | Last Modified : 17 Apr, 2019 10:10 am
about-trissur-special-story

இயற்கை வனப்பையும் மனித முயற்சியால் படைக்கப்பட்டிருக்கும் கலையம்சங்களின் வரிசைகளையும் தரிசிக்க உகந்த இடம் என்றால் அது கேரளா மாநிலம் திரிச்சூர் அல்லது திருச்சூர் ஆகும். 

சிவபெருமானின் திருத்தலம் எனும் பொருளைத்தரும் திருச்சிவபேருர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்நகரம் திருச்சூர் என்று மாறி தற்போது திரிசூர் என்றே அழைக்கப்படுகிறது.  கேரளத்தின் கொல்லத்துக்கு அடுத்ததாக ஐந்தாவது பெரிய நகரம். இந்த நகரத்தின் புகழுக்கு முக்கிய காரணமே இங்கு உள்ள வடக்குநாதன் கோவிலில் நடைபெறும் பாரமபரியமான திருச்சூர் பூரம் திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது. வெறும் பொழுதுபோக்கு சுற்றுலா எனும் தேடலுக்கு அப்பாற்பட்டு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய ஸ்தலமாக விளங்குகிறது திரிச்சூர். 

கேரள மாநிலத்தின் கலாச்சார தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இந்த திரிச்சூர் நகரம்.  தெய்வீக மணம் வீசும் சூழல், இயற்கை எழில் மற்றும் மண்ணுக்கேயுரிய பாரம்பரிய அம்சங்கள் போன்றவற்றை தன் அடையாளங்களாக கொண்டுள்ளது திரிசூலம்.  திரிசூர் சுற்றுலாப் பயணத்தின்போது நகருக்கு அருகிலுள்ள பல நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், அணைப்பகுதி போன்ற ஏராளமான இயற்கை எழில் ஸ்தலங்களுக்கும் பயணிகள் ரசித்து மகிழலாம். இந்தியாவின் நயகாரா என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியும் இங்கு உள்ளது. இது போன்ற திரிச்சூரை பற்றி ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன.  

திரிசூர் முழுக்க முழுக்க அர்த்தமுள்ள சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. அப்படி என்ன வென்று தெரிந்துகொள்ள வேண்டுமா ! திரிசூரில் பல மியூசியங்கள் அமைந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானவைகள்: ஸ்டேட் மியூசியம், ஷக்தன் தம்புரான் அரண்மனை, ஆர்க்கியாலஜிகல் மியூசியம், கேரளா கலாமண்டபம், சங்கர சமாதி ஆகியவை. இங்கு செல்ல அக்டோபர்-பிப்ரவரி மாதங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

பூரம் திருவிழா :

மிகவும் பிரசித்து பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா ஆண்டுதோறும் மே மாதங்களில் விழாவுக்கான தேதி குறிக்கப்படுகிறது. இத்திருவிழாவில் தேன்கின்காடு என்ற பெரிய மைதானத்தில்  நூற்றுக்கணக்கான யானைகளின் அணிவகுப்பு உலகில் எங்கும் நடக்காத விதத்தில் மக்களை கவரும் வகையில் கம்பீரமாக நடத்தப்படுகிறது. இதில் யானைகளுக்கு அலங்காரத்துடன் காணப்படும் இத்திருவிழாவை காண வெளிநாட்டு பயணிகளும் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். திரிசூர் பொழுதுபோக்காக மட்டும் அல்ல, ஆன்மிகத்திற்கும் உகந்த இடம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close