இயற்கை எழிலுடன் கூடிய காட்டுயிர் சரணாலயம்.. "பத்ரா"

  இளங்கோ   | Last Modified : 20 Apr, 2019 12:08 pm
batra-forest

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சரணாலயம் தான் பத்ரா காட்டுயிர் சரணாலயம். பத்ரா காட்டுயிர் சரணாலயம் பிரசித்தி பெற்ற ஓர் சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது.  பரந்து விரிந்து காணப்படும் இந்த சரணாலயம் மேற்குத்தொடர்ச்சி மலையின் வறண்ட மற்றும் ஈர இலையுதிர் காடுகளை உள்ளடக்கியுள்ளது. 

1951 ம் ஆண்டில் இது ஜகரா இயற்கை வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1974ம் ஆண்டு பத்ரா காட்டுயிர் சரணாலயம் என்று மாற்றப்பட்டது. பின்னர்  1998ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு திட்டத்துக்கான காட்டுப்பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வனப்பகுதி ஒரு காட்டுயிர் சரணாலயமாக மாற்றப்பட்டு பத்ரா காட்டுயிர் சரணாலயம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பத்ரா காடு சுமார் 495 ச.கீ. மீ பரப்பளவை கொண்டுள்ளது. 

சிறுத்தை, யானை, காட்டெருமை, சாம்பார் மான், புலி, மான், முள்ளம்பன்றி போன்றவை இங்கு வசிக்கின்றன. மேலும் பறவையினங்களில் தெற்குப்பிரதேச பச்சைப்புறா, மரகதப்புறா, மலபார் கிளி, மலை மைனா மற்றும் கறுப்பு மரங்கொத்தி போன்றவை இங்கு காணப்படுகின்றன. ஊர்வன வகைகளில் கரு நாகம் இந்தியமலைப்பாம்பு போன்றவையும், வண்ணத்துபூச்சி வகைகளில் ஆரஞ்சு இறகு வண்ணத்துபூச்சி, மூங்கில் பழுப்பு வண்ணத்துபூச்சி, புளூ பான்சி வண்ணத்துபூச்சி போன்ற அரிய வகைகளும் இங்கு உள்ளன. பறவை வகைகள் வசிக்கும் காட்டுயிர் சரணாலயமான இது பறவை ஆர்வலர்கள் விரும்பும் ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. 

கிளிகள், புறாக்கள், கௌதாரி, காட்டுக்கோழி, புதர்க்காடை, பச்சைக்கிளி, மரகதப்புறா, மைனா மற்றும் மரங்கொத்திகள் போன்றவை இங்கு காணப்படும் சில குறிப்பிடக்கூடிய பறவைகளாகும். இங்கு பலவகையான மான்களான புள்ளி மான், சாம்பார் மான் மற்றும் குரைக்கும் மான் போன்றவற்றை பார்க்கலாம். காட்டெருமை, கருகுரங்கு, மந்திக்குரங்கு, தேவாங்கு, மலபார் ராட்சத அணில் மற்றும் யானைகள் ஆகியன இங்குள்ள சில குறிப்பிடத்தக்க உயிரினங்களாகும். 

இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கு மலையேற்றம், பாறையேற்றம், பறவை வேடிக்கை மற்றும் படகுச்சவாரி போன்றவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளையும் வசதிகளையும் வழங்குகிறது. காட்டுயிர் அம்சங்களுக்கு அப்பாற்பட்டு இந்த பத்ரா ஸ்தலத்தின் இயற்கை எழில் பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். பலவித மலர்த்தாவரங்களோடு இங்கு நாவல் மரம் போன்ற பெரு மரங்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது தவிர தேக்கு, இந்திய கினோ மரம், பனை மரம், கருங்காலி மரம், புன்னை மரம் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. 

பத்ரா இந்த வனப்பகுதியில் ஓடும் ஆற்றின் துணை ஆறுகள், பத்ரா அணை நீர்த்தேக்கம் மற்றும் இந்த பிரதேசத்தை சூழ்ந்துள்ள ஹெப்பேகிரி, கங்கேகிரி, முல்லியநகரி, பாபா புதான் கிரி போன்ற மலைகள் இந்த பிரதேசத்தை ஒரு அற்புதமான இயற்கை எழில் ஸ்தலமாக மாற்றியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close