கோட்டையை ‛கோட்டை’ விட்ட காங்கிரஸ் கட்சி!

  விசேஷா   | Last Modified : 23 Apr, 2019 07:30 pm
how-congress-party-fell-down-at-north-eastern-states


வடகிழக்கு மாநிலங்களில் கோலோச்சி வந்த காங்கிரஸ் கட்சி, சில ஆண்டுகளுக்கு முன், அங்கு தன் செல்வாக்கை இழக்க துவங்கியது. குறிப்பாக, 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்குப் பின், வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும், பாரதிய ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்தது. 

காலங்காலமாக ஆட்சி செய்த மாநிலங்களில் அடிப்படை சாலை வசதிகளைக் கூட நிறைவேற்றாத காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர். அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, உத்தரகண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. 

நேருவின் மகள் இந்திரா காலத்திலும் சரி, அவரது மகன் ராஜிவ் காலத்திலும் சரி வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே திகழ்ந்தன. அதற்கு பின், படிப்படியாக அங்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சரியத்துவங்கியது. 

இதன் உச்சமாக, 2014 மக்களவை தேர்தலுக்குப் பின், சிக்கிம் தவிர அங்குள்ள அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., நேரடியாகோ அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனோ ஆட்சி அமைத்தது. அந்த மாநிலங்களில், இன்றும் பா.ஜ., அல்லது அதன் கூட்டணி ஆட்சியே தொடர்கிறது. 

காங்கிரஸ் கட்சிக்கு சோதனையான காலங்களில் எல்லாம், இந்த மாநிலங்கள் கை கொடுத்து வந்தன. வடகிழக்கு மாநிலங்கள் என்றாலே, அது காங்கிரஸ் அல்லது அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பிராந்திய கட்சிகளுக்குத் தான் வெற்றி என்ற நிலை இருந்தது. அந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. 

மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான அரசு, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தியதும், அந்த மாநிலங்களுக்கு புதிய ரயில் திட்டங்கள் செயல்படுத்திதும், அங்கு, புதிய சாலைகள் அமைக்கப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டதும், மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. 

புதிய நுாலகங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில் வர்த்தக பூங்காக்கள், எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை பா.ஜ., தலைமையிலான அரசு செய்து வந்துள்ளது. இதில், குறைந்தபட்ச திட்டங்களைக் கூட, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகள் நிறைவேற்றாததே, அதன் கோட்டை தர்க்கப்பட்டதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது, 


தற்போதைய நிலையில், அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., தனித்து ஆட்சி செய்கிறது. அதே சமயம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., கூட்டணி ஆட்சியும் நடைபெறுகிறது. 

மேற்கண்ட மாநிலங்கள் அனைத்திலும், சில ஆண்டுகளுக்கு முன் வரை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆட்சி செய்தன. குறிப்பாக, பன்னெடுங்காலமாக இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாத சக்தியாகவே திகழந்தது. 

நாம் முன்பு கூறியது போல், நீஸ் எனப்படும், நார்த் ஈஸ்ட், ஈஸ்ட் மற்றும் சவுத் மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியும், அதற்கான காரணங்களையும் பற்றி, வரும் தொடர்களில் விரிவாகக் காணலாம். 

தொடரும்...

தரவுகள் உதவி: சுந்தரம்.நாகராஜன்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close