பிரதமர் மாேடிக்கு கோபம் வருமா? நடிகருடனான பேட்டியில் சுவாரசிய தகவல்கள்

  விசேஷா   | Last Modified : 24 Apr, 2019 05:53 pm
pm-narendra-modi-in-conversation-with-akshay-kumar-part-1

ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம், தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர், பிரதமர் நரேந்திர மாேடியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேட்டியெடுத்தார். தேர்தல், அரசியல் சார்பற்ற பல கேள்விகளுக்கு, பிரதமர் நரேந்திர மாேடி அளித்த பதில்களில் சில...

கோபம் என்பது எல்லாேருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், அதை எப்படி வெளிப்படுத்துகிறோம், எப்படி கையாள்கிறோம் என்பது மிக முக்கியம். எனக்கு கோபம் வரும் நேரங்களில், ஒரு காகிதத்தை எடுத்து, கோபம் வருவதற்கான காரணங்களை வரிசையாக எழுதுவேன். 

ஒருமுறைக்கு இருமுறை, மூன்று முறை தொடர்ந்து எழுதுவேன். ஆனால், என் மனசாட்சிக்கு எதிராக எதையும் அதில் எழுத மாட்டேன். அப்போது எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும். கோபத்திற்கான காரணம், என் செயலாகவும் இருக்கலாம், அல்லது பிறர் செயலாகவும் இருக்கலாம். எதுவாயினும், அதை பெரிதுபடுத்தமாட்டேன். பின் அந்த காகிதத்தை கிழித்து, என் மனதில் எழுந்த கோபத்தையும் அழித்துவிடுவேன். எனவே, நான் வேறு யாரிடமும் கோபத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் எழாது. இது தான் தன்னை உணர்தல். தன்னை உணரும் பட்சத்தில் பிறர் மீது காேபப்பட வேண்டிய அவசியம் இருக்காது. 

நான் சிறுவயதிலேயே, குடும்பம், உறவு என அனைத்தையும் துறந்தவன். நான் பிரதமர் ஆனதற்குப் பின், என் குடும்பத்தை பிரிந்து டெல்லியில் குடியேறியிருந்தால், அவர்களை பிரிந்த வருத்தம் இருந்திருக்கும். ஆனால், நான், 18 - 20 வயதிலேயே, வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். 

என் தாயை, இங்கு அழைத்து வந்தாலும், நான் என் பயணப் பட்டியல், கால அட்டவணைப் படியே நேரத்தை செலவழிப்பேன். தவிர, அவருக்கும், இங்கு பொழுது போகாது. நான் தேசப் பணிக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். எனவே, தனிப்பட்ட உறவுகளுக்கோ, பந்த பாசங்களுக்காகவோ என்றும் ஏங்கியது கிடையாது. 

நான், இளம் வயதில், ராணுவ வீரர்களை பார்த்து, நாட்டை காக்கும் பணி கண்டு வியந்துள்ளேன். அவர்களைப் போலவே, ராணுவத்தில் சேர்ந்து தேசத்திற்காக சேவை செய்ய வேண்டும் எனவும் ஆசைப்பட்டேன். 

நான் யாரையும் உருட்டி மிரட்டி பணி செய்ய வைப்பதில்லை. நான், காலை முதல் இரவு வரை அலுவல் பணிகளை மேற்கொள்கிறேன். நள்ளிரவில் கூட, கோப்புகள் நிலை குறித்து, பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டறிகிறேன். 

இதனால், பிரதமர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களும் காலம் தவறாமல் தங்கள் பணிகளை முடிக்கின்றனர். இதனால், இயல்பாகவே, ஒரு ஒழுங்கு முறை, நேரம் தவறாமை, பணி மீதான அக்கறை பிறக்கிறது. அது தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது.

இதற்கு முன், பிரதமர் அலுவலகத்தில், இப்படியொரு ஒழுங்குமுறை இல்லாததால், நான் உருட்டி, மிரட்டி வேலை வாங்குவதாக தெரிகிறது. ஆனால், அது உண்மையல்ல என்பது, பி.எம்.ஓ., அதிகாரிகள், ஊழியர்களை கேட்டால் தெரியும். 
தொடரும்...

நீங்கள் சிரித்து பேசுவதே கிடையாது... எப்போதும் சீரியஸ் முகத்துடன் இருப்பதாக கூறப்படுகிறதே... அது ஏன்? என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மாேடி அளித்த பதிலை அடுத்த பகுதியில் காணலாம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close