அலாவுதீன் அற்புத விளக்கு கிடைத்தால் பிரதமர் மோடி என்ன வரம் கேட்பார்? 

  விசேஷா   | Last Modified : 24 Apr, 2019 07:16 pm
pm-narendra-modi-akshay-kumar-special-interview-part-2

நடிகர் அக்ஷய் குமாருடனான சிறப்பு பேட்டியின் போது, பிரதமர் நரேந்திர மாேடி அளித்த பதில்கள்...

பிரசார மேடைகளில் மாற்றுக் கட்சித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் எத்தனையோ திட்டிக்கொண்டாலும், பார்லிமென்ட்டில் நுழைந்துவிட்டால், அனைவரும் ஓர் குடும்ப உறுப்பினர்கள் என்ற உணர்வுடனே பழகுவோம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், என் மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர். 

முன்பொரு காலத்தில், நான் பார்லிமென்ட் உறுப்பினராக இல்லாத காலத்தில், அவரை சந்திக்க நேர்ந்தது. இருவரும், நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தோம். அதை பார்த்த மாற்றுக் கட்சிக்காரர் ஒருவர் கேட்டார். நீங்கள், ஒரு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவருடன் எப்படி இவ்வளவு சகஜமாக பழகுகிறீர்கள் என்று. 

அதற்கு, ஆசாத் பதில் கூறினார். கட்சி, அரசியல் என்பதை தாண்டி, நாங்கள் அனைவரும் ஓர் குடும்பத்தினர் போலவே பழகுகிறோம் என்றார். அது தான் அவரின் மாண்பு. அதே போல், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பிரசார மேடைகளில் என்னை  வசைபாடினாலும், ஆண்டு தோறும் எனக்கு ஒரு குர்தா பரிசளிப்பார். 

எனக்கு இனிப்பு பண்டங்கள் அனுப்பி வைப்பார். வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, அங்கு தயாரிக்கப்படும் புதுவித இனிப்புகளை எனக்கு அனுப்பி வைத்ததை கேள்விப்பட்டவுடன், மம்தா பானர்ஜி, ஆண்டுக்கு மூன்று முறை எனக்கு இனிப்புகளை அனுப்பி வைத்தார். 

நான், குஜராத் முதல்வராக பொறுப்பேற்கும் வரை, எனக்கென தனி வங்கிக் கணக்கு இருந்தது கிடையாது. என் பள்ளிப் பருவத்தில், தேனா வங்கி அதிகாரிகள், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு உண்டியல் கொடுத்தனர். தங்கள் சேமிப்பை அதில் போடச்சொல்லி, உண்டியல் நிறைந்ததும், வங்கிக் கணக்கில் அதை டெபாசிட் செய்யச் சொன்னார்கள். 

ஆனால், அந்த கணக்கில் நான் ஒரு ரூபாய் கூட சேமிக்கவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பின், வங்கி அதிகாரிகள் என்னை தேடி வந்து, அந்த கணக்கை முடிக்க என்னிடம் கையெழுத்து பெற்றுச் சென்றனர். எனக்கான பணத் தேவை எப்போதும் இருந்ததில்லை. அதனால், சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததில்லை. 

நான் முதல்வர் ஆன பிறகு தான், சம்பளக் கணக்கிற்காக வங்கி கணக்கு துவங்கப்பட்டது. அதில் இருந்த பணம், 21 லட்சம் ரூபாயை, நான் பிரதமர் பதவி ஏற்பதற்கு முன், குஜராத் சட்டப்பேரவை டிரைவர்கள், பியூன்களின் குழந்தைகள் கல்வி செலவுக்காக செலவழிக்கும் படி நன்கொடையாக வழங்கினேனன்.

இதையெல்லாம் பார்த்தால், நான் ஒரிஜினல் குஜராத்தியா என்ற சந்தேகம் வரக்கூடும். ஏனெனில், குஜராத்திகள் என்றாலே, அவர்களின் பணம், வியாபாரத்தில் மிகுந்த கவனம் செலுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு வேளை என் கையில் அலாவுதீன் அற்புத விளக்கு கிடைத்தால், அதனிடம் ஒரே ஒரு வரம் கேட்பேன், இனி எந்த கல்வி நிலையங்களிலும், கதைகளிலும், அலாவுதீன் அற்புத விளக்கும், அந்த பூதமும் குறித்த கதையை கூற வேண்டாம் என, கல்வியாளர்களிடம் எடுத்துரைக்கும் படி கூறுவேன். 

ஏனென்றால், உழைப்பால் கிடைக்காத எதுவும் நிரந்தரம் இல்லை. உழைப்பை தவிர, அதிர்ஷ்டத்தாலோ, குறுக்கு வழியிலோ உருப்படியாக எதுவும் கிடைக்காது என்பதே நிதர்சனம். 

இவ்வாறு அவர் கூறினார். 

தொடரும்....

மாேடியின் டிப் டாப் உடை அலங்காரம் குறித்து அவர் கூறியதை அடுத்த தொடரில் காண்போம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close