தென்னகத்தின் மகாராணி... கேரளாவின் தேக்கடி !

  இளங்கோ   | Last Modified : 25 Apr, 2019 12:18 pm
south-india-queen-kerala-s-thekkadi

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி என்னும் ஊரில் உள்ள ஓர் சுற்றுலா தலங்கள் தான் தேக்கடி. இவை தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைப்பகுதியில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ளது.   தேக்கடி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது படகுசவாரிதான். அந்தளவிற்கு இடுக்கியில் பிரசித்தி பெற்றது இந்த சுற்றுலாத் தலம். இங்கு சுற்றுலா வருபவர்கள் சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் அழகை ஆழமாக கண்டு ரசிக்கலாம். 

இங்கு காடுகளும், மலைகளும், பசுமைத் தோட்டங்களும் நிறைந்த தென்னகத்தின் மகாராணியாய் காட்சியளிக்கிறது. பசுமைச் சூழல் நிறைந்த மலைப் பிரதேசங்களுக்கும், இயற்கைச் சூழல் நிறைந்த காடுகள் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல வெண்டும் என்றால்  கேரளாவில் பல இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் தேக்கடி. 

தேக்கடி பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்கும்  புகழ் பெற்றது.  தேக்கடி பகுதியில் 673 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள பெரியாறு தேசியப் பூங்கா எனும் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் யானை, புலி, சோலை மந்தி, காட்டு எருமை, மான் போன்ற உயிரினங்கள் அதிகமாக இருக்கின்றன.  இங்குள்ள ஏரிப் பகுதியில் படகில் பயணம் செய்தபடியே இந்த நீர்நிலையைத் தேடி வரும் வன விலங்குகளைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தேக்கடி  விளங்குகிறது.  

தேக்கடி படகுத்துறைக்குள் செல்வதற்கு முன்புள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா முழுவதும் அழகிய புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி புலிகள் சரணாலயம் என்பதை நினைவூட்டும் வகையில் இப்பூங்காவின் நடுப்பகுதியில் மரக்கிளைகளின் மேல் புலி நிற்பது போன்ற கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக பூங்காவின் சுற்றுப்பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு யானைகள் மீது அமர்ந்தபடி ஏரிப்பகுதியையும் இயற்கை அழகையும் ரசித்து வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த யானை பயணத்திற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தேக்கடி வனப்பகுதியில் நுழைவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

காடுகளும், இயற்கையும் கொண்ட தேக்கடியில் பெரியார் வனவிலங்கு சரணாலயம், குமுளி,  கவி, மங்களாதேவி  கோவில், கடத்தநாடன் களரி மையம், முரிக்கடி, பாண்டிக்குழி போன்ற இடங்களுக்கு பயணிக்கலாம்.  இப்படி பல சுற்றுலா தலங்கள்,  சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக தேக்கடி உள்ளன.

கோயம்புத்தூர், மதுரை, தேனி போன்ற நகரங்களில் இருந்து குமுளி செல்லும் பேருந்துகள் மூலம் தேக்கடிக்கு சென்று மகிழ்ச்சியாக கோடையைக் கழிக்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close