வர்கலா கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கும்...!

  இளங்கோ   | Last Modified : 25 Apr, 2019 01:28 pm
vargala-beach-in-kerala

கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமே வர்கலா. இவை பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குணம் கொண்ட இந்தக் கடற்கரையில் முழுக்குப் போடுவது உடலின் அசுத்தங்களையும் ஆன்மாவின் அனைத்துப் பாவங்களையும் தீர்ப்பதாக நம்பப்ப்படுகிறது. எனவே தான் இதன் பெயர் பாபநாசம் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. பாபநாசம் என்னும் வார்த்தையின் பொருள், பாவங்களை தொலைத்தல் என்று பொருள். 

இக்கடலில் நீராடுவதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. இவை புனித யாத்திரை ஸ்தலமாக விளங்குகிறது. சிவகிரி மடம், வர்கலா பீச், பாபநாசம் பீச், கப்பில் ஏரி, வர்க்கலா சுரங்கப்பாதை, மற்றும் பவர் ஹவுஸ் போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் வர்கலா நகரத்தில் நிறைந்துள்ளன. இக்கடற்கரையில் பாராசூட் குதிப்பு, படகுப் பாராசூட் சவாரி போன்ற சாகசப் பொழுதுபோக்கு அம்சங்களிலும் சுற்றுலா பயணிகள் ஈடுபடலாம். 

பருவநிலை கேரளாவின் எல்லா கடற்கரை நகரங்களையும் போலவே வர்கலா மிதமான பருவநிலையை கொண்டுள்ளது. குளிர்காலத்திலும் மிதமான பருவ நிலையைக் கொண்டுள்ளதால், சுற்றுலா பயணிகள்  இப்பகுதிக்கு வர மிகவும் பொருத்தமான இடமாக உள்ளது. கடற்கரைக்கு அருகிலேயே பொழுதுபோக்குக்கு ஏற்ற கபில் ஏரி எனும் நீர்த்தேக்கப் பகுதியும் அமைந்துள்ளது.  தங்கத்தீவு எனும் தீவுப்பகுதியும் 100 வருடங்கள் பழமையான ஒரு சிவன் பார்வதி கோயில் அமைந்துள்ளது. 

அஞ்செங்கோ ஃபோர்ட், வர்கலா சுரங்கப்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் போன்ற  சுற்றுலா தலங்களும் உள்ளன. யோகா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை மையங்களுக்கு பொருத்தமான இடமாக வர்க்கலா நகரம் உள்ளது.  வர்கலா கதகளி மையம் எனும் பாரம்பரிய கலை மையமும் பயணிகளை கவரும் வகையில் பிரத்யேக கதகளி நிகழ்ச்சியும், மோகினியாட்டம் எனும் மற்றொரு நடனக்கலை நிகழ்ச்சியும் வர்கலாவில் பெயர் பெற்றுள்ளது.  

அரபிக்கடலுக்கு அருகிலேயே மிக உயரமாக உள்ள மலைகள் இந்நகரின் தனி அடையாளமாக பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. கேரள கடலோரப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள தனித்துவமான புவியியல் அம்சமாகும் என புவியியல் வல்லுநர்களால் இந்திய புவியியல் ஆய்வுத்துறை வாயிலாக வர்கலாவின் அமைப்பை பற்றிய முடிவை வெளியிட்டுள்ளனர். இந்திய புவியியல் ஆய்வு மையம் இந்த வித்தியாசமான புவியியல் அமைப்புக்கு வர்கலா அமைப்பு என்றும் பெயரிட்டுள்ளது.   

வர்கலாவில் எண்ணற்ற இயற்கை நீர் ஊற்றுக்களும், தாதுக்களும் கொண்டிருக்கிறது. இக்கடற்கரை நீந்துவதற்கும், சூரியகுளியலுக்கும் ஏற்ற சொர்க்கமாக விளங்குகிறது. இக்கடற்கரை, ஒய்வுக்காக வருபவர்களையும், இயற்கையையும்,அதன் ரம்மியத்தை ரசிக்க வருபவர்களையும், மற்றும் மத ஈடுபாட்டுடன் வருபவர்களையும் ஒரு சேர ஈர்கிறது. இங்கு செல்வதற்கு திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் சென்று, அங்கிருந்து வர்கலார் கடற்கடைக்கு செல்ல பேருந்துகளும், ரயில் வசதிகளும் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close