ஐ.நா., கூட்டத்தில் பதற்றம் அடைந்தாரா பிரதமர் மாேடி? 

  விசேஷா   | Last Modified : 25 Apr, 2019 05:00 pm
did-modi-get-nervous-at-united-nation-assembly-speech

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மாேடி, பதற்றத்துடன் காணப்பட்டாரா என்பது குறித்த பல கேள்விகளுக்கு மாேடியே நேரடியாக பதில் அளித்துள்ளார். நடிகர் அக்ஷய் குமாருடனான பேட்டியில் அவர் கூறியதாவது: 

நான் சிறு வயது முதலே, குழு விளையாட்டுகளில் ஈடுபடுவதையே அதிகம் விரும்புவேன். அப்போது தான், குழுவாக செயல்படும் மனப்பான்மை வளர்வதுடன், மற்றவர்களின் மனநிலையை எளிதில் அறிந்து கொள்ள முடியும். குழுவின் தலைவரின் ஆணைக்கு கட்டுப்படும் மனப்பான்மை வளர்வதுடன், ஒழுங்கு, நேரம் தவறாமை, அனைவருடன் சேர்ந்து செயலாற்றும் குணம் வளரும். 

சிறு வயது முதலே நீச்சல் அடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆயிரம் கி.மீ., நடந்தே சென்று, கைலாஷ் புனித யாத்திரை சென்றுள்ளேன். இயற்கை மருத்துவத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவன் என்பதால், சிறு சிறு காய்ச்சல், உடல் வலிக்கெல்லாம் மருந்து உட்கொள்ளும் பழக்கம் இல்லை. 

காலை 5 மணிக்கும், மாலை 6 மணிக்கும் திறந்த வெளியில் தனிமையில் நின்று தேனீர் அருந்துவது மிகவும் பிடிக்கும். உடலில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றாலும், நான் வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவது கிடையாது. 

நான் எப்போதும், என் தாய் அல்லது குடும்பத்திற்கென பணம் அனுப்பியது கிடையாது. இப்பாேதும், நான் குஜராத்தில் உள்ள வீட்டிற்கு சென்றால், என் தாய் தான் எனக்கு பணம் கொடுத்து ஆசீர்வதிப்பார். நாடு முழுவதையும் என் குடும்பமாக கருதுவதால், எனக்கென்று தனி குடும்பம் என நினைப்பதில்லை. 

நான் பிரதமராக பதவியேற்ற பின், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது. நான் எப்போதும், எந்த கூட்டத்திலும் பேச தயங்கியது கிடையாது. ஆனால், எழுதி வைத்து, அதை பார்த்து படிப்பது எனக்கு வராது. 

எனக்கு முன் ஐ.நா., கூட்டத்திற்கு சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு நான் சென்றது,ம் நீங்கள் உரையாற்ற வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். ஆனால், நீங்கள் பேசப் போவதை முன் கூட்டியே காகிதத்தில் அச்சடித்து அவர்களிடம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

அது தான் ஐ.நா., வழக்கம் என்பதால், வேறு வழியின்றி, நான் பேசப்போவது குறித்து, அங்கேயே அவசர அவசரமாக சுருக்கமாக கூறினேன். அதை, என் உதவியாளர்கள் குறிப்பெடுத்து, காகித வடிவில் தயார் செய்தனர். அங்கு தான் பிரச்னையே, எனக்கு எதையும் பார்க்காமல் பேசுவதில் எந்த தங்கு தடையும் இருக்காது. 

ஆனால், காகிதத்தில் எழுதி வைத்த உரையை பார்த்து அதன் படி பேசுவதென்றால், அது சற்று சிரமமானது தான். ஏனெனின், என் சிந்தனை அவ்வளவு வேகமானது. ஒரு விஷயத்தை படித்து முடிப்பதற்குள், என் சிந்தனை பல மடங்கு யாேசித்திருக்கும். 
இதற்கு பெயர் பதற்றம் கிடையாது. என் சிந்தனையை அடக்கி, இயல்பு நிலைக்கு மாறாக நடந்து கொண்டதால் பார்ப்பதற்கு அப்படி தெரிந்திருக்கும். 

நான் தனிமையை அதிகம் விரும்புபவன். ஆனால், முதல்வர், பிரதமர் பொறுப்புகளுக்கு வந்த பின், அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. நான் பொதுவாக தீபாவளி பண்டிகையை வீட்டில் உள்ளவர்களுடன் கொண்டாடுவதில்லை. அன்றைய நாள், நான்கு, ஐந்து நாட்களுக்கு தேவையான சுத்தமான குடிநீரை மட்டும் எடுத்துக் கொண்டு, தனியான வனாந்திரத்திற்கு சென்றுவிடுவேன். 

என் கையில் ரேடியோவோ, புத்தகமாே கூட இருக்காது. இயற்கையை ரசித்து, அதனுடன் பேசிப் பழகி, உண்மையை சொல்லப்போனால், அப்போது தான் என்னுடன் நான் பேசுவதை உணர்வேன். காட்டில் கிடைக்கும் பழங்களை உண்டு, அங்கேயே நிழலில் படுத்துறங்கி, வெளியுலக கூச்சலில் இருந்து தொலைதுாரத்தில் கிடைக்கும் அமைதியை ரசிப்பேன்.

ஆனால், முதல்வர், பிரதமர் பொறுப்புகள் வந்த பிறகு, அந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை. எனினும், காலை, மாலை நேரங்களில் தேனீர் குடிக்கும் சொர்ப்ப பொழுதில், மனதை அமைதியாக்கி, சிந்தனையற்று என்னை நானே புதுப்பித்துக் கொள்வேன். நான் யாேகா பழகியவன் என்பதால், இன்றும், அதை தினமும் செய்கிறேன். அதுவே, என் உடல், மன ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

அரசியல் சார்பற்ற, கட்சிகள் பற்றி பேசாத இந்த அருமையான பேட்டியை நான் மிகவும் ரசித்தேன்.
இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close