ஜனநாயகத் தலைவன்...!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 26 Apr, 2019 02:47 pm
democratic-leader

“வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”

இந்த வரிகளைப் புரிந்தவர்கள் மட்டுமே பாரதியின் ஆன்மாவிற்கு நெருக்கமானவர்கள். மற்றவர்கள் பாரதியின் பக்தர்களாகவோ, வாசகர்களாகவோ, நேசர்களாகவோ இருக்கக் கூடும். பாரத தேசத்தின் இறையாண்மையை மீட்டுக் கொண்டு வர விழைந்த பாரதியின் தீர்க்கமான வரிகள் இவை. தற்பெருமைக்கும், பீட்டா வகை ஆளுமைகளின் மறைவிடத்திற்கும் பாரதி பயன்பட்டிருக்கிறான். ஆனால், பாரதியின் பெயரைச்  சொல்லி பலர் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாவம் பாரதியின் நிழலில் அவர்களும் பிழைத்துப் போகட்டும். எனினும், பாரதியின் ஆன்மத் தொடர்புள்ள ஒருவனால் தான் பாரதியின் இந்தக் கனவினை நிகழ்த்திக் காட்ட முடியும். ஆன்மத் தொடர்புக்கு, மொழி ஒரு தடையில்லை என்பதற்கான உதாரண புருஷனாக ஒருவன் எழுந்திருக்கிறான்! வாழ்க எம்மான்!

உலகத் தலைவர்களின் உயிருக்கு மிகவும் அச்சுறுத்தல் இருக்கும் என்பது இயல்பு தான். ஆனால், இன்றைக்கு இந்த ஒருவரின் தலை கிடைத்தால் மட்டும் போதும் என்றளவிற்கு, உலகமெங்கும் இருக்கும் பிரிவினை சக்திகளும், மதத் தீவிரவாதிகளும், 24x7ல் ஷிஃப்ட் போட்டு திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் தலை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலை.

ஏன் அமெரிக்க, இஸ்ரேல், ரஷ்ய அதிபரின் தலைகள் என்ன மட்டமா என்ற கேள்வி எழலாம். அங்கேயெல்லாம்  அவர்களுக்குச் சமமான இன்னொரு தேசபக்தியாளன் உடனடியாகப் பதவி ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். இங்கே, நம் நாட்டில் நம் பிரதமரையே கொல்லத் திட்டம் போட்டுக் கொடுக்க, ஏராளமான கள்ள நரிகள் காத்துக் கிடக்கின்றன. இந்த ஒற்றை மனிதரைக் கழட்டி விட்டால், மொத்த சிஸ்டத்தையும் உடைத்து விடலாம் என்பதே உலகமெங்கும்  இருக்கும் பல பயங்கரவாத அமைப்புகளின் திட்டம்.

இதோ, சமீபத்தில் கிருத்துவ தேவாலயங்களில் குண்டு வைத்து, உலக மக்களை மிரட்டிய இஸ்லாமியப் பயங்கரவாதிகளால், உலகமெங்கும் இருக்கும் தலைவர்களுக்கு விடப்பட்ட சவால் தான். அத்தனை பலம் வாய்ந்தவர்களால் கடந்த ஐந்து வருடங்களில் ஏன் இந்தியாவிற்குள் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியவில்லை?

கடந்த ஐந்து வருடங்களில், இந்த பயங்கரவாதிப் பேடிகளால் செயல்பட முடிந்தது வெறும் நான்கே நான்கு இடங்களில் தான். நான்கு இடங்கள் என்றாலும், செத்தவர்கள் மனிதர்கள் இல்லையா என்று கேட்கும் நாக்கும், புத்தியும் முதலில், இத்தனை பாதுகாப்பையும் தாண்டி இந்திய மக்களைக் கொல்லத் துடிக்கும் பயங்கரவாதிகளைக் கேள்வி கேட்கட்டும்.

ஒரு சமூகத்தின் தலைவன், ஒரு நாட்டின் தலைவன் அந்த நாட்டு மக்களுக்குத் தரக்கூடிய மிக முக்கியமான உத்திரவாதம் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கான பாதுகாப்பினை தான். அதைக் கொடுக்கக் கூடியவன் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் ஒளிந்து கொண்டு வீரவுரை ஆற்றுவது என்பது  நகைமுரணின் உச்சம். 

மாறாக, “வா! முடிந்தால் என்னைத் தொட்டுப் பார்! பிறகு என் நாட்டு மக்கள் மீது கை வைக்கலாம்” என்று நெஞ்சினை நிமிர்த்தி ஒரு தலைவன் லட்சக்கணக்கான மக்களின் முன் திறந்தவெளியில் பயணித்துக் காட்டுகிறான் என்றால், அதை விட பெரிய ஆண்மைத்தனம், ஆளுமைத் திறனை வேறெங்கு பார்க்க முடியும்? கணக்கிலடங்காத பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுவது தான் ஆண்மை என்றால் பன்றிகளைத் தான் முதல் அடுக்கில் வைக்க வேண்டும். விவேகாநந்தர்களோ, அப்துல்கலாம்களோ, முத்துராமலிங்கத் தேவர்களோ, திருமணமே செய்து கொள்ளாவிட்டாலும், தனக்கென வாரிசுகளை உருவாக்கிக் கொள்ளாவிட்டாலும் ஆண்மையின் உச்சகட்ட அடையாளமாகத் திகழ்கிறார்கள்.

மதச் சார்பு கொண்ட இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் அடியோடு வெறுத்தாலும், அவர்கள் மீது வன்மம் காட்டாமல், அனைவரையும் அரவணைத்து  அனைவருக்கும் முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்யும் ஒரு தலைவனாக இன்றைக்கு நம் முன்னே ஒரு பிரதமர் நிற்கிறார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஒரு நகரில், ஓராயிரம் குறுக்கு நெடுக்கான சந்துகள் நிறைந்த ஒரு பண்டைய நகரில்  திறந்தவெளியில் மக்களிடையே நான்கு மணி நேரம் இயல்பாகப் பயணிக்க முடிந்த அளவிற்கு நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்திருக்கும் ஒரு பிரதமர் சொல்லும் செய்தி என்ன தெரியுமா? 

”வெள்ளிப்பனி மலை மீதுலாவுவோம்” என்பது தான். உங்களால் எங்கேயும் பயணிக்க முடியும். ஆனால் உலாவுதல் என்பது முற்றிலும் அமைதியான ஓர் இடத்தில் மட்டும் தான். பனிமலை என்பது இமயமலை. இந்தியாவின் அதிதீவிர பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கக் கூடிய பனிமலையில் கூட காலாற, மனமாற உலாவும் அளவிற்கு பாதுகாப்பினை உறுதி செய்திருக்கிறேன் என்பது தான். வெறும் பாதுகாப்பு மட்டும் ஒரு நாட்டிற்குப் போதுமா? சகல சௌபாக்கியங்களோடு வாழ பொருளாதாரம் அவசியம் இல்லையா? அதற்குத் தான் அடுத்த வரி.

 “அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்” 

மேலை –மேற்கு ; அடி என்பது கீழே, கிழக்கு. மேலை நாடுகள், கீழை நாடுகள் எங்கும் நம் வாணிபத்தைப் பெருக்குவோம் என்ற பாரதியின் கனவினை நனவாக்கி வியாபாரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டியிருக்கிறார் நம் பிரதமர். அதுவும் ஐந்தே வருடங்களில். 

நீங்கள் எந்த சாமியை வேண்டுமானாலும் கும்பிட்டுக் கொள்ளுங்கள்.  ஆனால், அந்த சாமி உங்கள் நல்வாழ்விற்காக அனுப்பப்பட்ட ஒரு தலைவன் தான் நேற்று வாரனாசியில் தம் மக்களுடன் உலாவந்து காட்டியிருக்கிறார். 

வந்தே மாதரம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close