அழகிய மலைப்பகுதியில் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் !

  இளங்கோ   | Last Modified : 27 Apr, 2019 11:53 am
parambikulam-zoo

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றூர் அருகே ஆனைமலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் இடையே பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

இந்த விலங்குகளின் சரணாலயத்தில் பரம்பிக்குளம், தோனகடவு, மற்றும் பெருவாரிபள்ளம் போன்ற மூவரால் உருவாகப்பட்டதாகும். இதன் நுழைவு வாயிலில் தான் அழகிய துவையர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.  இந்த சரணாலத்திற்கு உட்பட்ட இடத்தில் 7 பெரிய பள்ளத்தாக்குகளும், 3 ஆறுகளும், தேக்கடி, பரம்பிக்குளம் அணை மற்றும் சோலையாறு அணை அமைந்துள்ளது.  இங்கு மலைவாழ்மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் நமக்கு மலைஏற்றத்திற்கு வழிகாட்டிகளாக  உள்ளனர். இவர்கள் வனத்துறையினரால் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்க ஏதுவாக வனப்பயண வாகன வசதிகள் உண்டு. இங்கு குச்சிமுடி, வெங்கோலிமலை, புலியரைபாதம் போன்ற அழகிய மலைப்பகுதிகளும் இங்கு காணப்படுகின்றன. இங்கு காரபாரா ஆறு , மற்றும் குரியர்குட்டி ஆறு ஆகிய நதிகளும் ஒடுகின்றன. புலிகளின் பாதுகாப்பு மையமாக விளங்கும் இப்பகுதி சூழலியல் சுற்றுலா துறைக்கான சிறந்த இடமாக விளங்குகிறது.  இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பல நாடுகளிலிருந்தும் மலையேற்ற வீரர்கள் இங்கு உற்சாகத்துடன் வருகிறார்கள்.    இப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு மூங்கில் படகு சவாரி மரக்க முடியாத ஒரு அனுபவத்தை தரும்.  

இங்கு வாழும் உள்ளூர் வாசிகள் மட்டும் மீன்பிடிப்பதற்கு நாட்டு படகுகலை மட்டும் பயன்படுத்துகின்றனர்.  இங்கு வாழும் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு தனியார் நிறுவனங்களும் தன்னார்வத்துடன் உதவி செய்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகக் கவர்ச்சியான இடமாகக் காணப்படும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், புலிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக விளங்குகிறது. இவை நெல்லியம்பதி மலையிலிருந்து ஆனைமலை வரை அமைந்துள்ளது. 

பொள்ளாச்சியின் மிக அருகில் உள்ள டாப் ஸ்லிப் தமிழகத்தின் மிக முக்கியமான வனச் சரணாலயம் ஆகும். இவை கும்கி யானைகளின் புகலிடம். தமிழில் வெளிவந்துள்ள பல சினிமாக்களில் டாப் ஸ்லிப் இடம்பெற்றிருக்கிறது. இயற்கை வளம் நிறைந்த இந்த அடர்த்தியான கட்டு பகுதியில், பலவிதமான மரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.   உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் மிகவும் பழைமையான கன்னிமாரா தேக்கு மரம் இங்குதான் இருக்கிறது. இந்த மரம் மகாவிருக்ஷா புரஸ்கர் என்ற இந்திய அரசு விருதைப் பெற்றுள்ளது. இங்கு தான் தேக்கு மரங்கள் ஆசியாவிலேயே அதிக அளவில் காணப்படுகின்றன. 

இங்கு அமைந்துள்ள தீவுப்பகுதியில் பெரிய மரங்களின்மேல் வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்படுகிறது.  இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.    ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு சுற்றுலா மையமாகும்.  பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலய சுற்றுலா பயணத்தின் போது, சைலன்ட் வேல்லி தேசிய பூங்கா, நெல்லியம்பதி, திப்பு சுல்தான் கோட்டை, மயிலாடும்புரா மயில்கள் சரனாலயம், மான் பூங்கா, போத்துண்டி நீர்த்தேக்கம் மற்றும் தோணி பாதுகாக்கப்பட்ட காடுகள் போன்ற இடங்களுக்கும் செல்லலாம்.  

பரம்பிக்குளத்தில் மூன்று அணைகளும் கடல்போல் காட்சி அளிக்கும் பிரமாண்ட ஏரியும் உண்டு. கரையோர விலங்குகளை ரசித்துக்கொண்டே படகுச் சவாரியில் செல்லலாம். ஏரியின் நடுவே ஆங்காங்கே சில தீவு கள்... குன்றுகள். ஒரு தீவில் இருக்கும் குன்றின் உச்சியில் ஒரு பிர மாண்ட பங்களா இருக்கிறது. 

பரம்பிகுளம் காட்டிற்குள் செல்ல ஏற்ற காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை. புலிகள் சரணாலயத்திற்கு தமிழ் நாட்டின் பொள்ளாச்சி நகரிலிருந்தும் கோயம்புத்தூர், கோழிக்கோடு, பாலக்காட்டில் இருந்தும்  செல்லலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close