தனிமைப்படுத்தப்படுகிறதா பாகிஸ்தான்?

  பாரதி பித்தன்   | Last Modified : 30 Apr, 2019 12:07 pm
major-setback-for-pakistan

 வளர்ச்சி திட்டங்களின் வெற்றியால் தான், ஒரு நாட்டின் வளமை இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானோ தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்து, அவர்கள் கொடுக்கும் பணத்தில் தான் வளர்சி பெற்றதாக காட்டிக் கொள்கிறது. 

அந்த நாட்டிற்கு மதம் ஒரு போர்வைதான். 1947ம் ஆண்டு துவங்கி, கடைசியாக புல்வாமா தாக்குதல் வரை இந்தியாவிற்கு அந்த நாடு கொடுத்த தொல்லைகள் ஏராளம். இதை சர்வதேச அரங்கில் இந்தியா வெளிப்படுத்திய போது அந்த நாடுகளுக்கு தீவிரவாதத்தின் பாதிப்பு அவ்வளவாக தெரியாத காரணத்தால், ஆதரவு கிடைக்கவில்லை. 

ஆனால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் நிலைமை மாறிவிட்டது. இந்த தாக்கதலுக்கு காரணமான பின்லேடனை, பாகிஸ்தான் உள்ளே சென்று இறங்கி, தாக்கி கொன்று விட்டு ஹாயாக திரும்பி சென்று அமெரிக்க படை. அதற்கு பாகிஸ்தான் எவ்விதமான எதிர்விளைவுகளையும் காட்டவில்லை என்பது அந்த நாடு வலுவிழந்து விட்டதை காட்டுகிறது. 

அதே போல, இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் உள்ளே சென்று, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த விவகாரத்தில், இந்தியா வாழ் இந்தியர்களை தவிர்த்து யாரும் தட்டிக் கேட்கவில்லை. நம்மால் தான் முடியவில்லை அவனாவது தாக்குகிறானே என்ற நினைப்பு, பாகிஸ்தான் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுவிட்டது. 
இதன் காரணமாக, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், வசமாக உலக நாடுகள் தாக்குகின்றன. அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை அப்படித்தான் இருக்கிறது. 

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் வெளிநாட்டில் இருந்து ஊடுருவல் செய்பவர்கள் தான் என்பது டிரம்பின் திடமான நம்பிக்கை. அதன் காரணமாகத்தான், நாட்டை சுற்றி சுவர் எழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அது சர்ச்சை ஏற்படுத்தினால் கூட, அவர் தன் முடிவில் இருந்து இறங்கி வரவில்லை. 

அடுத்த கட்டமாக, அந்த நாட்டில் விசா இல்லாமல் தங்கி இருப்பவர்களை சம்பந்தப்பட்ட நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அந்த நாடு மேற்கொள்ள தொடங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட நாடு, அவர்களை மீண்டும் ஏற்காத பட்சத்தில் அந்த நாட்டு குடிமக்களுக்கு விசா வழங்குவதில்லை என்ற நடைமுறை அமெரிக்காவில் உள்ளது. 

இதன்அடிப்படையில், ஒரு சில நாடுகள் உள்ளன. தற்போது பாகிஸ்தான் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.  இதன் காரணமாக, பாகிஸ்தானியர்கள், அமெரிக்கா செல்ல விசா பெற முடியாது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு அந்த நாடு எவ்விதமான எதிர்வினை செய்யும் என்று அனைத்து நாடுகளுமே கவனிக்கின்றன. 

இதில், அமெரிக்காவின் நடவடிக்கை வெற்றி பெற்றால், இதர நாடுகளும் இதே முயற்சியில் இறங்கும். அப்போது மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலானவை, இந்த நடவடிக்கையை தொடங்கினால், பாகிஸ்தான் தனிமையில் சிக்கி கொள்ளும். ஏற்கனவே, தீவிரவாதிகளை ஊட்டி வளர்த்து, பல நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள அந்த நாட்டிற்கு இது பலத்த அடியாக இருக்கும். 

இதற்கு உள்நாட்டில் எதிர்ப்பு தோன்றினால், அதை சமாளிக்க அந்தா நாட்டு அரசு இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கலாம். அது மேலும், அந்த நாட்டிற்கு சிக்கலை ஏற்படும். புத்திசாலிகளாக இருந்தால், விசா முடிந்தவர்களை ஏற்றுக் கொண்டு, இந்த பிரச்னை எழாமல் தொடக்கத்திலேயே பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் புத்திசாலித்தனத்திற்கும், பாகிஸ்தானுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுவது இயல்பானதே!
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close