பிரதமர் மோடி சாணக்கியரா, சதிகாரரா?

  பாரதி பித்தன்   | Last Modified : 03 May, 2019 11:40 am
special-article-about-modi-mamata-election-game

ஜோதிபாசு இருந்தவரை மேற்குவங்க மாநிலத்தின் நிரந்தர முதல்வர்  அவர்தான்.  இது அவரின் ஆட்சித் திறமையா, அல்லது வேறு வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஏற்பட்டதா என்பது, அந்த மாநிலத்தில் பல ஆண்டுகள் வசதித்தவர்களுக்கே வெளிச்சம். 

அங்கு, காங்கிரஸ் கட்சி தடம் பதிக்க போராட்டம் நடத்திய காலகட்டத்தில், அந்த கட்சியில் இருந்து வெளியேறி திணாமுல் காங்கிரஸ் என்று கட்சி தொடங்கி சாதித்து காட்டியவர் மம்தா பானர்ஜி. இடதுசாரிகளை ஆட்சியில் இருந்து அகற்ற, மம்தாவிற்கு போராட்டம் என்ற பெயரில் வன்முறை கைகொடுத்தது. 

ஆட்சியில் அமர்ந்த பின்னரும், வன்முறையே வழிமுறை என்று போராட்டத்தை தொடர்ந்தார் மம்தா. இதற்கு சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், காவல்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முயன்ற போது, முதல்வர் மம்தாவே தர்ணாவில் ஈடுபட்டதை உதாரணமாக கூறலாம். 

அதே போல எதிர்கட்சிகள் குறிப்பாக பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம்  செய்ய, எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு தடை செய்து பார்த்தார். ஆனால் மோடியோ கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று மம்தாவிற்கு எதிராக வன்முறையை கையில் எடுக்காமல், அரசியல் ரீதியான போராட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இது, மேற்கு வங்கமாநிலத்தில் எடுபடுகிறது. கூச் மாவட்டத்தில் பாஜ பொதுக்கூட்டத்திற்கு, மிகச் சிறிய அளவிலான இடம் மட்டுமே ஒதுக்கி மாநில அரசு அனுமதிமதியளித்தாலும், மக்கள் எதிர்பார்ப்புடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர். துர்க்காபுர் டவுன், தாக்கூர் நகர் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களிலும் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். 

அந்த கட்சிக்கு, தற்போது விரல் விட்டு எண்ணும் அளவில் தான் மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த நிலையிலேயே மோடியின் கூட்டத்திற்கு இத்தனை பேர் வருகிறார்கள் என்றால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாதா எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. 

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும், மம்தா  அணியில் குண்டு வீசும் வகையிலும், கடந்த மாதம் 29ம் தேதி மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் செரம்போரில் நடந்த கூட்டத்தில், மோடியின் பேச்சு இருந்தது. அவர் திரிணாமுல் எம்எல்ஏகள் 40 பேர் என்னிடம் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் பாஜகவிற்கு வருவார்கள் என்று பேசியிருக்கிறார். 

மோடியின் இந்த வார்த்தைகள், ஒரு பிரதமர் இப்படி பேசலாமா என்ற விமர்சனத்தை ஒருபுறம் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் நீங்கள் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை, எதிரி தான் முடிவு செய்வார் என்பதற்கு ஏற்றார் போல், மம்தாவின் அடிவயிற்றில் தீயை அள்ளிக் கொட்டி இருக்கிறது மாேடியின் வார்த்தைகள். 

மம்தாவின் வன்முறை அரசியலுக்கு, இது பதிலடியாக அமைந்திருக்கிறது. மம்தா, பிரதமர் பதவிக்கு குறிவைக்கும் அதே நிலையில், மோடி கூறியது உண்மையாக இருக்கும் என்றால், நிச்சயம் அவரின் முதல்வர் பதவிக்கு ஆப்பு காத்திருக்கிறது என்றே அர்த்தம். 

அராஜக அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக, அவர்களின் போக்கில் அராஜகம் செய்யாமல், வார்த்தை ஜாலத்தால், அவர்களின் வயிற்றை கலங்கடிக்கும் மாேடியின் பேச்சு, சிலருக்கு சாணக்கியத்தனமாகவும், சிலருக்கு திட்டம் தீட்டிய சதிச் செயலாகவும் தோன்றுகிறது. 

பிதரமர் மாேடி, சாணக்கியரா அல்லது சதிகாரரா என்பது, மே 23ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். அதுவரை  சற்று காத்திருப்போம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close