மக்களவை தேர்தலில் இதுவரை 68.2% வாக்குப்பதிவு

  விசேஷா   | Last Modified : 04 May, 2019 03:40 pm
loksabha-election-till-now-68-polling-in-4-phase

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்., 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை, நான்கு கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.  அதில், சராசரியாக, 68.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான பா.ஜ., அரசின் பதவிக் காலம் நிறைவடைவதை அடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவை தேர்தல், நாடு முழுவதும், கடந்த மாதம், 11ம் தேதி துவங்கியது. இம்மாதம், 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், இதுவரை, நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. 

முதல்கட்ட வாக்குப்பதிவு, ஏப்., 11ம் தேதி அன்று நடைபெற்றது, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும், அசாம், பீஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 69.5 சதவீத வாக்குகள் பதிவாகின. 

அதை தொடர்ந்து, ஏப்., 18ல், 95 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 69.44 சதவீத வாக்குகள் பதிவாகின. ஏப்., 23ல் நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில், 68.4 சதவீத வாக்குகளும், 29ல் நடைபெற்ற வாக்குப்பதிவில், 65.5 சதவீத வாக்குகளும் பதிவாகின. 

மாெத்தமுள்ள, 543 தொகுதிகளில், வேலுார் தவிர, 542 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், இதுவரை, 373 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இது மொத்த தொகுதியில், 69 சதவீதம் ஆகும். 

இதுவரை நடைபெற்றுள்ள நான்கு கட்ட தேர்தல்களில், சராசரியாக, 68.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்னும், பீஹார், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள சில தொகுதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close