இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவி எது என்று தெரியுமா !

  இளங்கோ   | Last Modified : 05 May, 2019 06:00 pm
india-s-2nd-biggest-falls

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மிக பெரிய அருவிதான் சிவனசமுத்திரா (அ) சிவசமுத்திரம் அருவி. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும், உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும். 

இந்த அருவி மைசூர் மாவட்டம் காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ளது.  நீங்கள் இதுவரை பார்த்து ரசித்துள்ள அருவிகளிலேயே இந்த அருவி சற்று விந்தையாக இருக்கும். காவிரி வரும் வழியில் மிகப்பெரிய மலைப்பாறை ஒன்றால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ககனசுக்கி, பரசுக்கி என இரண்டாகப் பிரிந்து இரண்டு அருவியாக விழுகிறது. கங்கன சுக்கி அருவி மேலும் இரு பிரிவுகளாக ஒரு பாறையால் பிரிக்கப்பட்டு இரு திசைகளாக பிரிந்து கொட்டுகிறது. இந்த இரு பிரிவுகளிலும் பல அருவிகள் உள்ளன.  

பாராசுக்கி கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் அப்பால் மூன்று பெரிய பிரிவுகளாக விழுகிறது.கங்கனசுக்கி அருவியை சிவனசமுத்ரா காட்டில் அமைக்கப்பட்டுள்ள பார்வைமேடையிலிருந்து, அருகே உள்ள ஹஸ்ரத் மர்தான் கைப் என்னும் சூபியின் தர்காவில் இருந்தும் பார்க்கலாம். நீங்கள் காரில் செல்லும் போது கூட தொலைவில் தொங்கி ஆடிக்கொண்டிருகும்  பாராசுக்கி அருவியைப் பார்க்கலாம்.  

அருவிகள் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் அகலத்துக்கு  விழுகின்றன.சராசரியாக 320 அடி உயரமானது . ஆனால் குற்றாலம் அருவி போல அருகே சென்று பார்க்க முடியாது. அருவி விழும் மலைப்பள்ளத்துக்கு மறுபக்கமிருக்கும் மலைமேல் நின்றுதான் அருவியை பார்க்கமுடியும். இரண்டு பக்க அருவிகளையும் இரு வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நின்று பார்க்கவேண்டும். ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு வகை வழியும் பெருக்கும் பொழிவும் ஒழுக்கும் கொண்டது . வெயில் என்று பார்க்காமல் அருவிகளை நோக்கிக்கொண்டு ஆங்காங்கே மக்கள் அருவியின் அழகை ரசிக்கின்றனர்.

இங்கு இந்தியாவின் இரண்டாவது நீர் மின்சாரத்திட்டம் ஒன்று 1884 ஆம் ஆண்டு சிவசமுத்திரம் நீர் மின்சாரத்திட்டம் என தொடங்கப்பட்டது.  இங்கிருந்துதான் கோலாருக்கு மின்சாரம் சென்றதாம். இவை  இந்தியாவின் இரண்டாவது நீர்மின்சாரத்திட்டம்  ஆகும். 

இந்தியாவின் மிகப்பெரிய பட்டு சந்தைகளில் ஒன்றான  ராமநகரா தற்போது பட்டு நகரம் என அழைக்கப்படுகின்றது. இதன் வழியாகவும், மரப்பாச்சி பொம்மைகளுக்கு பெயர் பெற்ற சன்னபட்டனா  தற்போது  Land Of Toys என அழைக்கப்படும் சிறு நகரம், ஆகிய ஊர்களின் வழியாக, செல்லும் போது அந்த ஊரின் சிறப்புகளையும் அதன் வரலாறுகளையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. பயணங்கள் முழுவதும் இனிமையானதாக அமைய வேண்டும் என்றால் சாம்ராஜ் மாவட்டத்தில் உள்ள சிவமுத்திரம் அருவிக்கு வாருங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close