மலபார் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்... தலச்சேரி !

  இளங்கோ   | Last Modified : 05 May, 2019 06:21 pm
about-tellicherry-special-story

கேரளவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக  கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி விளங்குகிறது.  இது தெல்லிசேரி எனவும் அழைக்கப்படுகிறது. பாரம்பரியச் செழுமை மற்றும் சொக்க வைக்கும் இயற்கை எழில் அம்சங்களை கொண்டுள்ளது தலச்சேரி.  மலபார் கடற்கரைப்பகுதியின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்று சொல்லலாம். 

தலச்சேரிக்கு நீண்ட வரலாறுகள் ஆங்கிலேயர்களை முன்வைத்து கூறப்படுகிறது. வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஆங்கிலேயர் இந்த தலச்சேரிக்கு 1682ம் ஆண்டு வருகை தந்துள்ளனர். கடற்கரைக்கு அருகிலேயே அமைந்திருந்ததால் இது ஒரு வணிகக்கேந்திரமாக மாறியுள்ளது. பலவிதமான அரசியல் மற்றும் இலக்கிய செயல்பாடுகள் இங்கு உருவாகியிருப்பதால் இது மலபார் பகுதியின் கலாச்சார தலைநகரமாகவும் அறியப்படுகிறது.  தலச்சேரி கோட்டை அல்லது தெலிசேரி கோட்டை என்றழைக்கப்படும் இந்த வரலாற்று சின்னம் 1708ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியரால் கட்டப்பட்டுள்ளது. 

இவை முழப்பிளாங்காட் கடற்கரையை ஒட்டி ஒரு குன்றின்மீது தெலிசேரி கோட்டை உள்ளது. இந்த கோட்டை பிரம்மாண்டமாக உயர்ந்து காட்சியளிக்கும் சுற்றுச்சுவரையும், நுணுக்கமான குடைவு வேலைகளையும் மரக்கதவுகளையும் இக்கோட்டை கொண்டுள்ளது. அரபிக்கடலை நோக்கி ரகசிய சுரங்கப்பாதைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோட்டை பற்றிய விபரங்கள் அடங்கிய காட்சி மாடம் ஒன்றையும் இதன் உள்ளே காணலாம். மேலும் சமாதி ஸ்தல புகைப்படங்கள், சின்னங்கள் குறித்த தகவல்கள், ஓவியங்களின் புகைப்படங்கள் போன்றவை இதில் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த நகரத்தில்  வெஸ்லிஸ் பங்களா, ரண்டத்தரா ஏலக்காய், எஸ்டேட்,  கத்தோலிக் ரோசரி சர்ச், வாமில் கோயில், தாகூர் பூங்கா, உதயா களரி சங்கம், கவர்ன்மென்ட் ஹவுஸ் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை வந்து செல்கின்றனர்.

ஆசியாவின் நீளமான டிரைவ் இன் பீச் தலச்சேரியிலிருந்து 9 கி.மீ தூரத்தில் முழப்பிளாங்காட் பீச் இங்கு அமைந்துள்ளது. கேக் தயாரிப்பு மற்றும் பேக்கரி தொழில் போன்றவை உருவான பிரதேசம் என்பதோடு செழுமையான உணவுப் பாரம்பரியமான நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தலச்சேரி சுற்றுலா தலங்களில் இங்கிலிஷ் சர்ச், மீனவர் கோயில், ஓவர்பர்ரிஸ் ஃபோலி, தலச்சேரி கோட்டை மற்றும் ஜும்மா மஸ்ஜித் போன்றவை தலச்சேரி சுற்றுலாத்தலத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close