சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் கவின் மிகு நீர் வீழ்ச்சி!

  இளங்கோ   | Last Modified : 07 May, 2019 02:43 pm
water-fall-to-the-tourists

கர்நாடக மாநிலம் சிவமொக்கா  (ஷிமோகா) மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி இந்த ஜோக் நீர்வீழ்ச்சி. இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நீர்வீழ்ச்சிகளில், உலக அளவில் 13–வது இடத்தில் உள்ளது. ‌

ஷராவதி ஆற்றில் இருந்து உருவாகும் இந்த நீர்வீழ்ச்சியில், தங்கு தடையின்றி  பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து வெள்ளி கம்பியை உருக்கிவிட்டது போல் கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகை தருகின்றனர்.

மேலும் ஜோக் நீர்வீழ்ச்சி 4 கிளைகளாக பிரிந்து அருவிகளாக தண்ணீர் கொட்டுகிறது. கம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்ந்த  இயற்கையின் படைப்பாய் விளங்குகிறது இந்த ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.  

பெரும் இரைச்சலுடனும் தண்ணீர் விழும் நீர்வீழ்ச்சிக்கு ரோரா என்றும், தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழும் நீர் வீழ்ச்சிக்கு ராக்கெட்‘எனவும் பெயரிடப்படுகிறது. மேலும் அமைதியாக நீர் கொட்டும் நீர் வீழ்ச்சிக்கு ராணி என்றும், ‌ஷரவாவதி ஆற்றில் கோவில் கட்ட விரும்பிய சோண்டா ராஜாவின் பெயரால் ஒரு நீர் வீழ்ச்சிக்கு ராஜா எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.

இயற்கை அழகை ரசிக்க ஒவ்வொரு ஆண்டும் இந்த நீர்வீழ்ச்சியை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நான்கு அருவிகளும் நிரந்தரமானவை வருடம் முழுவதும் தன்ணீர் கொட்டும். இதில் பருவமழை, கனமழை காலங்கள் வந்துவிட்டால் ஏகபட்ட அருவிகள் உருவாகிவிடும்.

அப்போது இந்த நான்கு பிரதான அருவிகள் இன்னும் அழகு பெரும்.  இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் அதிகம் பேர் மலை ஏற்றம் போன்ற சாகச பயணங்கள் செய்ய விரும்பி வருகின்றனர். இந்த பகுதியில் தோட்ட கலைத்துறை சார்பில் விதவிதமான பூக்கள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளன. அதோடு அருவியை சுற்றிக் பச்சை பட்டாடை உடுத்தியது போல் அமைந்திருக்கும் மரங்களும், செடிகொடிகளும் நீர்வீழ்ச்சியின் அழகை அதிகப்படுத்துகிறது.

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை பயணிகள் ரசிப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. ஜோக் நீர்வீழ்ச்சியை சுற்றி இருக்கும் ஸ்வர்ண நதியும், ஷராவதி பள்ளத்தாக்கும் பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். ஜோக் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சினிமா படகாட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மலைகள் சூழ்ந்த இடங்கள் காடுகள், நதிகள், என இயற்கையன்னை தன் அழகு பொக்கிஷங்களை கொட்டி வைத்திருக்கும் இடமாக உள்ளது.

இந்த ஜோக் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழ்கண்ட நதிகள் உற்பத்தியாகின்றன.

  • ஷராவதி
  • துங்கபத்ரா
  • காளி
  • கங்காவதி
  • தடதி

இது தவிர ஜோக் அருவியின் அருகில் மந்தகட்டே பறவைகள் சரணாலயம் சிறப்புமிக்க பொழுதுபோக்கு இடமாக உள்ளது. ஜோக் நீர்வீழ்ச்சி மழைகாலங்களில் மேகமூட்டமாய் தெரியும். ஆனால் கோடையில் சூரிய ஒளிபட்டு வானவில்லை உருவாக்கும். எப்படி பார்த்தாலும் ஜோக் நீர்வீழ்ச்சி அழகுதான். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close