பெருமைவாய்ந்த ஜாம்பவான்களின் கற்க் கோட்டை!

  இளங்கோ   | Last Modified : 07 May, 2019 03:11 pm
chitradurga-fort

கர்நாடக மாநிலத்தின் மத்திய பகுதியான சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது சித்ரதுர்கா கோட்டை. இவை வரலாற்று சிறப்பு மிக்க இடமாக உள்ளது. இந்த அழகிய இடத்தினை சித்ரக்கல் துர்கா என்றும் கூறுவர். இங்குக் குடை வடிவில் காணப்படும் இந்தக் கோட்டை, காலத்தால் தாக்குப்பிடித்து கோட்டைக்கே உரியதொரு பெருமையைத் தாங்கி இன்றும் நிற்கிறது.

வேதவதி நதியின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த இடம் மிகவும் பிரசித்திப்பெற்ற இடமாக விளங்குகிறது. இந்த இடத்தினைப் பாறைகளும், கற்பாறைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ, அதில் நிற்கும் நம் கால்கள் இதமானதொரு உணர்வினைப் பெறுகிறது என்றே கூறவேண்டும். இந்த இடத்தினை கல்லினக் கோட்டை (அ) கற்க் கோட்டை என்றும் பெருமையுடன் அழைப்பார்கள்.

சித்ரதுர்காவை பிரசித்திப் பெற்ற ஆட்சியாளரான மடக்காரி நாயகா மற்றும் வீரமங்கை ஓனாகே ஒபாவா ஆகியோர் ஆண்டதாகவும் சொல்லப்படுகிறது. ஓனாகே ஒபாவா, யாருக்கும் அஞ்சாத ஒரு வீரமங்கை என்றும் அந்த வீர மங்கையின் கரங்களால் ஹைதர் அலிக்கு அடிமைகளாக இருந்த நூற்றுக்கு மேற்பட்ட எதிரிப் படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்தக் கோட்டையின் முன்புக் காணப்படும் நுழைவாயிலை 'ஒபவானா கிண்டி' என்றும் அழைக்கின்றனர். இவ்வாறு வரலாற்றுப் புத்தகமாகவும் பல ஜாம்பவான்களின் சிறப்பாகவும் விளங்கிய இந்த சித்ரதுர்காவின் பெருமைக்குரிய ஐந்து இடங்களைப் பற்றி பார்க்கலாம்..

  • சித்ர துர்காக் கோட்டை
  • வாணி விலாஸ் சாகர் அணை
  • சந்திரவல்லி
  • அங்கல்லி மடம்
  • அடுமல்லேஷ்வர ஆலயம்

இந்தக் கோட்டை, பத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்த பல்வேறு சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த மன்னரால் கட்டப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. இந்தக் கோட்டையின் மறு சீரமைப்புப் பணிகளைத் திப்பு சுல்தான் ஆண்டபொழுது செய்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் கோட்டைக்குள் பதினெட்டு கோயில்கள், கோட்டையின் மேல் பகுதியில் உள்ளன. இடிம்பேஸ்வரன், சம்பங்கி, சித்தேஸ்வரா, ஏகாந்தம்மா, பல்குணேஸ்வர், கோபால கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சுப்புராயர், நந்தி கோயில்கள் என, பிற இடங்களில் காண இயலாத கோயில்களை இங்கு மட்டுமே காண இயலும்.

அதேபோல் கோட்டையின் உள்புறத்தில் ஹைதர் அலி ஆட்சியின்போதுக் கட்டப்பட்ட ஒரு மசூதியும் உள்ளது. இங்கு நல்ல சுத்தமான காற்றுடன் கூடிய மண்டபங்களும், வற்றாத நீர்க் குளங்களும் உள்ளன. நீங்கள் விரும்பினால், மகிழ்ச்சியாக குளித்து மகிழலாம். நீங்கள் ஒரு சரித்திரப் புகழ் மிக்க கோட்டையைக் காண வேண்டும் என்று விரும்பினால், சித்ரதுர்கா கோட்டைக்கு செல்லலாம். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close