தென்னிந்தியாவின் நயாகரா எது தெரியுமா!

  இளங்கோ   | Last Modified : 08 May, 2019 11:15 am
south-india-s-nayagara

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முகுந்தபுரம் தாலுக்காவில் அமைந்திருக்கிறது பசுமை நிறைந்த அதிரப்பள்ளி என்னும் ஊர். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சாலக்குடி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது இந்த அதிரப்பள்ளி அருவி. சாலக்குடி ஆற்றுப்பெருக்கானது வழச்சல் வனச்சரகத்தின் வழியே பாய்ந்தோடி வந்து இந்த நீர்வீழ்ச்சியில் வழிந்து கீழே ஆழத்தில் ஓடும் ஆற்றில் விழுகிறது.  

இந்த நீர்வீழ்ச்சி கேரளத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை வளம் செழித்திருக்கிறது என்றே சொல்லலாம். இங்கு பாய்ந்தோடும் நீருடைய அருவிகள் இயற்க்கை நமக்கு கொடுத்த ஒரு கொடையாகவே சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர். 

82 அடி உயரத்திலிருந்து நான்கு பிரிவுகளாக இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. 100 மீட்டர்  அகலத்தை கொன்டுள்ளதால் மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்ட தோற்றத்துடன் இந்த நீர்வீழ்ச்சி நம்மை திகைக்க வைத்துவிடும். இதனால் இவை தென்னிந்தியாவின் நயாகரா என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள அருவிகளில் இந்த அருவியை மிகப்பெரியதாகும்.

இந்த அருவியின் மேல் சென்று பார்த்தால் அருவியை சுற்றியிருக்கும் பகுதிகளின் பசுமையை கண் குளிர காணலாம். அருவிகளை புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்களுக்கு இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது. சுற்றுலா தலமான சாலக்குடி அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதில், பிர்லா நீர்வீழ்ச்சி, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு ஆகியவை குறிப்பிடத்தக்கது. 

புன்னகை மன்னன் போன்ற திரைபடக் காட்சிகள் இங்கு எடுத்ததால் இந்த நீர்வீழ்ச்சி புகழ் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராள மானவர்கள் அதிரப்பள்ளிக்கு வருகின்றனர். நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.  வெயில் காலம் வந்து விட்டதால் குடும்பத்துடன் குளு குளு இடங்களுக்கு சென்று ரிலாக்ஸ் ஆக வேண்டுமென்று உங்களுக்கு யோசனை இருந்தால் கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி என்னும் ஊரில் இயற்க்கை கொடை கொடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்று வாருங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close