உலகத்தின்  இரண்டாவது பெரிய சிவன் சிலை எங்கு உள்ளது தெரியுமா..?

  இளங்கோ   | Last Modified : 09 May, 2019 07:25 am
world-s-2nd-biggest-sivan-statue

கர்நாடக மாநிலம் வடகன்னட மாவட்டத்தில் உள்ளது (முருதீசுவர்) முருகதேஸ்வரர் என்ற ஊர். இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது.  இங்கு சிவன் அருள்பாலிக்கும் முருகதேஸ்வரர் ஆலயம் உள்ளது. முருதீசுவர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். 

இந்நகரத்தில் உள்ள முருதீசவரன் கோவில் புகழ்பெற்றது. உலகத்திலேயே  இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமாக உள்ளது முருதேஸ்வர் நகரம். சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க,  நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். இங்கு வரும் பயணிகள் 123 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலையுடன், சிவலிங்கத்தையும் காணலாம். கடற்கரையை நோக்கிய வண்ணம் சிவன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரியும். எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. 

இந்தக் கோயிலை சுற்றிலும் நிறைய கான்க்ரீட் கல்வெட்டுக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தக் கோயிலின் ராஜகோபுரம் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இச்சிறப்புகளை காட்டிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோயில் தென்னிந்திய கட்டிடக் கலையின் உன்னத சாட்சியாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.  முருதேஸ்வர் ஆலயமும், சிவன் சிலையும் மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ அமைந்திருக்கிறது. 

இதன் காரணமாகவே ஆரம்பத்தில் நான்கு கைகளுடன் காணப்பட்ட சிவன் சிலையின்  உடுக்கை பிடித்திருந்த கை கடல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.  இந்தக் கோயில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக மக்களால் கருதப்படுகிறது.  இக்கோயிலின் ராஜகோபுரம் உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்று. இங்கு அரபிக்கடல் அமைதியாகவும், அழகாகவும், காணப்படுவதால் நீங்கள் கடலில் நீந்துவது, படகு சவாரி செய்வது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.  

அரபிக் கடலில் சூரியன் மறைந்துபோகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து மகிழலாம். அப்பகுதியின் மற்றொரு பிரபலமான இடம் அலைக் குளம். இங்கு குடும்பத்தோடு வருபவர்கள் தங்கள் குழந்தைகளோடு குதூகலமாக இருக்கலாம். அடுத்தப்படியாக முருதேஸ்வருக்கு வெகு அருகில் காணப்படும் பிரபலமான சுற்றுலா பகுதிகளாக உள்ளது புறாத்தீவு.  

நகருக்கு அருகில் ஜன சஞ்சாரமற்ற புறாத் தீவு என்றழைக்கப்படும் நேத்ராணி தீவு உள்ளது. பத்க்கல்லிலிருந்து படகுகளோ, மீன்பிடி படகுகளோ அமர்த்திக்கொண்டு சுற்றுலா பயணிகள் புறாத் தீவுக்கு செல்லலாம்.  எழில் சிற்பங்களை கண்டு ரசிப்பதர்க்காகவுமே இங்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இப்பகுதியில் பாரம்பரியமாக நடந்து வரும் எருமை பந்தயம் மிகவும் பிரபலமானது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close