தீமை தருவதோ தீதியின் கடமை..?

  பாரதி பித்தன்   | Last Modified : 10 May, 2019 11:32 am
about-mamta-banerjee-special-story

யாரிடம் பாடம் படிக்காவிட்டாலும், இயற்கை தரும் பாடத்தை கற்காமல் இருக்க முடியாது. தமிழர்கள் கஜாபுயலில் கற்ற பாடத்தை வைத்து பானி புயல் தந்த பாதிப்பை நன்றாக உணர முடியும். பானிபுயல் பாதித்த ஒடிசா, மேற்கு வங்க மாநிலம் ஆகியவற்றில் மத்திய அரசின் ஆட்சி கிடையாது. பாஜகவிற்கு எதிரான கட்சிகளே அந்த மாநிலத்தில் ஆட்சி செய்கின்றன. கடந்த முறை ஒடிசாவை தாக்கிய புயல் சுமார் 2500 பேரை பலிவாங்கி, உலகில் மிக கொடுரமான இயற்கை சீற்றத்தில் இடம் பிடித்தது.

இந்த முறை பானி புயல் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே மத்திய அரசும் சரி, ஒரிசா அரசும் சரி தனித்தனியாக நடவடிக்கைகளை தொடங்கியது. சுமார் 8 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயலின் தாக்கத்தை சரியாக கணித்து முன்னேற்பாடுகளை செய்ததால் திருமண வீட்டில் விருந்தனர்களை வரவேற்க காத்திருப்பது போல புயல் கரையை கடக்க காத்திருந்தனர். விளைவு உயிர் பலி ஒற்றை இலக்கமாக மாறியது. வழக்கமான சேதம் தான். அதையும் கூட ஒரிசா முதல்வர் நவீன்பட்னாயக், பிரதமர் மோடி இருவரும் ஒரே ஹெலிகாப்டரில் பறந்து சேதத்தை பார்வையிட்டனர். 

அதற்கு ஏற்ப மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கியது. ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் நவீன்பட்னாயக் முதல்வரின் கடமையில் இருந்து விலகி அரசியல் செய்ய வில்லை. இதனால் நாடு முழுவதும் அவரை பாராட்டுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரை நன்றியோடு நினைவு கூறுகிறார்கள். இது அவர் ஆட்சியை தொடர்வதற்கு கூட வழியேற்படுத்தும். இதைப் பற்றி அவர் நினைக்கவில்லை. மத்திய அரசும் கவலைப்படவில்லை. இது போலதான் மத்தியிலும், மாநிலத்திலும் அரசுகள் இருக்க வேண்டும். 

இதே புயல் மாநில அரசு எப்படி இருக்க கூடாது என்று ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது. அது மேற்குவங்க மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. தீதி என்று மேற்கு வங்க மாநில மக்கள் மம்தா ஒரு முதல்வர் எப்படி இருக்க கூடாது என்பது உதாரணமாக திகழ்கிறார். புயல்பாதிப்பு குறித்து அவரை மத்திய அரசு தொடர்பு கொண்டது. ஆனால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. மத்திய அரசு மம்தா மீது உள்ள கோபத்தில் கூட மிஸ்ட் கால் விட்டு கட் செய்து அழைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கலாம். 

ஆனால் மம்தா, தம்மாநில மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றதும் அவர் அல்லவா பிரதமரை, முடியாவிட்டால் ஜனாதிபதியை, அதும் முடியாவிட்டால் எதிகட்சியினரை .தொடர்பு கொண்டு கதறி இருக்க வேண்டும். அல்லது டெல்லியில் போய் ஆவேசம் காட்டி  இருக்க வேண்டும்.முதல்வரைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால் கூட அந்த மாநில தலைமை செயலாளரை, காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டது. ஆனால் மம்தாவோ நிவாரணத் தொகையை புதிய பிரதமரிடம் பெற்றுக் கொள்கிறேன் என்று சவால் விடுகிறார். அந்த மாநிலத்தை பொறுத்தளவில் சட்டசபைத் தேர்தலும், லோக்சபா தேர்தலும் இணைந்தே நடந்தது. 

தேர்தல் முடிவுகள் மம்தா முதல்வராகவும், மோடி பிரதமராகவும் அமர்ந்தால் தீதி நிவாரணத் தொகையை பெறுவாரா மாட்டாரா? அல்லது மோடி தோல்வி அடைந்து ராகுல் பிரமராக அமர்ந்தால் அவர் இன்றைக்கு கூட்டணிக்கு வைக்காததை நினைத்து பார்க்காமல் நிவாரணத் தொகையை அள்ளி வழங்குவாரா? அவ்வாறு செய்யாவிட்டால் தீதி அவருக்கு எதிராக என்னவிதமான எதிர்ப்பை தெரிவிப்பார். தீதி மோடியை எதிர்ப்பதை விட  மேற்கு வங்க மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கடமையை நினைத்து பார்க்க வேண்டியது அவசியம்.

காலத்தில் கிடைக்காத நிவாரணம் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. இதைப் பற்றி கவலைப்படாத மம்தாவை எப்படி திருத்தப் போகிறோம். நாளை 3 வது அணி என்ற பெயரில் பிரதமராக அமரும் நிலையில் இதே கோட்பாட்டை கடைபிடித்தால் தமிழகம் எந்த பதில் சொல்லப் போகிறது. என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close