ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா....?

  இளங்கோ   | Last Modified : 13 May, 2019 10:33 am
kishkintha-in-ramayana

கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது ஹம்பி. இடிபாடுகளும் அதன்  பின்னணியில் துங்கபத்திரை ஆற்றின் அழகும் சேர்ந்து இந்த பிரதேசத்தின் இயற்கை எழில் நம்மை பிரமிக்க வைக்கிறது. இவை  யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள து. இந்த ஸ்தலத்திற்க்கு  வருடம் தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களை வருகின்றனர். ஹம்பியிலுள்ள வரலாற்று இடிபாடுகளின் கட்டிடக்கலை ஆன்மீக வரலாற்று பின்னணிகளுக்கு ஹம்பி புகழ் பெற்று விளங்குகிறது. 

இங்கு பல பிரசித்தி பெற்ற கோயில்களும் உள்ளன.  ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்கி புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை  13ம் நூற்றாண்டு மற்றும் 14 ம் நூற்றாண்டுகளில் இது விஜய நகர அரசர்களின் தலைநகரமாக சிறந்து விளங்கியது. இந்த பிரதேசத்தை சுற்றிலும் காணப்படும் மலைகளிலிருந்தே விஜயநகர மன்னர்கள் தாங்கள் எழுப்பியுள்ள கோயில்களின் சிற்ப வேலைப்பாடு கொண்ட கல் தூண்களுக்கான பாறைகளை பெற்றுள்ளன.

இயற்கை அழகு மற்றும் கோயில்கள் மட்டும் அல்லாமல் ஹம்பியில் அழகாக கட்டப்பட்டுள்ள  பல தடாகங்களும் சமுதாய கட்டிடங்களும் அன்றைய விஜயநகர அரசின் ஆட்சி மேன்மைக்கும் நகர மேலாண்மை அறிவுக்கும் சான்றாய் விளங்குகின்றன.  மேலும் ஹம்பியின் பேரழகை  ரசிக்க இங்கு உள்ள மண்டகா மலைக்கு செல்லுங்கள். இங்கிருந்து பார்த்தால் ஒரே ஒரு காட்சியில் ஹம்பியின் முழு தொற்றத்தையும் ரசிக்கலாம். மலை என்றதும் சிலருக்கு மலைப்பக இருக்கும், ஆனால் இங்கு மஞ்சள் பூசிய ஒளி ஒருவிதமான உணர்வை நமக்குள் கடத்தும். 

மலையேறுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது கற்படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து இறங்கி சிறிது நேரம் பயணித்தால் துங்கபத்ரா நதி.  இந்த நதியில்தான் ஹம்பியில் அமைந்துள்ள கோயில்களின் யானைகள் தினமும் நீராடுகின்றன. ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. இங்கு உள்ள சிவன் மற்றும் கிருஷ்ணர் கோவிலுக்கு நாடெங்கிலும் இருந்து பக்தர்கள், உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் தினம் தினம் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.  950 மீட்டர் நீளமுடைய சந்தை, 30 சதுர மீட்டர் அளவுடைய ராணிகளின் குளியலறை, பிரம்மாண்ட அரண்மனையின் எச்சம் என அந்த நகரம் பார்க்க பார்கக வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது. 

இன்றும் ஹம்பி ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இப்படி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருள் அருங்காட்சியகமும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாக உள்ளது. ஒரு புறத்தில் துங்கபத்திரை நதியாலும் மற்ற மூன்று பகுதிகளிலும் மலைகளாலும் சூழப்பட்டு இயற்கையான அரணுடன் விளங்கிய இந்த ஹம்பி அல்லது விஜயநகரத்தினை அப்போதைய மன்னர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே விவேகத்துடன் தங்கள் தலைநகராக கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. எதிரிகளை தாக்காத வண்ணம் இந்த நகரத்தை உருவாக்கி இருப்பார்கள் என்று தான் நினைக்க வேண்டி இருக்கு.  ஹம்பியில் 500 க்கு மேற்பட்ட இடங்கள் நாம் பார்த்து ரசிப்பதற்கு உள்ளன. இவற்றில் 100 இடங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடம் தோறும் ஈர்க்கும் அளவுக்கு மிகுந்த பிரசித்தி பெற்றவை ஆகும்.  இவற்றில் ஒரு சில கோவில்களும், கட்டிடங்களையும் பார்கலாம்,,,

தாமரை மாளிகை,கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க அரண்மனை,யானைக் குழி, அஞ்சநாத்ரி மலை, துலா பாரம், ராணிகளின் படைப்பு சிற்பங்கள், ஆஞ்சநேயர் கோவில் ,கல்லால் ஆன,ஹனுமான் சிலை, பளிங்கு கல், யெதுரு பசவண்ணா, பிரம்மாண்டமான பாறைகள், அரண்மனை அந்தபுர வளாகம், அஞ்சநாத்ரி மலை, படைப்பு சிற்பங்கள், ராமர் கோவில், துணைவியார், பம்பா தேவி, திராவிட கட்டிட கலை, இசை தூண்கள், விக்கிரகங்கள், கல் தேர், விருபாக்‌ஷா ஆலயம், விட்டலா ஆலயம் போன்ற கோயில்கள் இங்கு உள்ளன. 

மேற்கண்டவற்றை நாம் முக்கியமாக பார்த்தால் அங்கு உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் கோவில்களை பார்துவிடலாம். இந்த விஜய நகரம் இன்று சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை வனப்பையும் தொல்லியல் வளத்தையும் கண்களுக்கு விருந்தாக அளிக்கின்றது.  ஹெம்பி தென்னிந்தியாவுக்கு வருகை தரும் எந்த ஒரு சுற்றுலா பயணியும் தவரவிடமாட்டார்கள். போதும் போதும் எனும் அளவுக்கு நம் கண்களுக்கு ஹம்பி ஒரு சுற்றுலா தலமாகவும் வரலற்றை பறை சாற்றும் விதமாகவும் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close