ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விருபாக்‌ஷா கோயில்...!

  இளங்கோ   | Last Modified : 13 May, 2019 11:15 am
virubasha-kovil-special-story

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில், விருபாஷி கிராமத்தில் அமைந்துள்ளது விருபாஷி (அ) விருபாக்ஷரேஸ்வரர் ஆலயம். இவை விஜயநகர மன்னர்கள் அமைத்த ஆலயங்களாகும். துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுதா மலை அடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட விஜயநகர மன்னர்களின் காவல் தெய்வம் விருபாக்ஷா.   இத்திருத்தலம் பம்பாபதி என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இவை  ஒன்பது அடுக்கு களைக்கொண்ட இந்த கொவில்  50 மீட்டர் உயர கோபுரத்திடன் அமைந்துள்ளது. 

இந்த ஆலயத்தில் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் கருவறை, மூன்று வாயில் அறைகள் மற்றும் தூண்களை கொண்ட ஒரு மண்டபம் போன்றவை காணப்படுகின்றன. இது தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து போன்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. விருபாக்ஷா என்றால் முக்காலமும் உணரும் மூன்றாவது கண் என்று அர்த்தம். ருத்ரனின் வடிவங்களுள் ஒன்றான இது, வலது கைகளில் சூலம், உடுக்கை, அங்குசம், சர்ப்பம், சக்கரம், கதை, அட்சமாலை ஏந்தியும், இடது கரங்களில் கேடகம், கட்டுவாங்கம், சக்தி, பரசு, கதை, கண்டா மற்றும் கபாலம் ஏந்தியவாறும் காட்சி தரும் என தல வரலாற்றில் கூறப்படுகிறது.

இக்கோவில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இங்கு 9 மற்றும் 11ம் நூற்றாண்டினை சேர்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. ரங்க மண்டபம் எனப்படும் கருவறையானது கிருஷ்ணராய தேவராயரால் 1510ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கு சான்றாக விஜயநகர கட்டிடக்கலை அமைந்துள்ளது. தூண்கள், கோயில் மடைப்பள்ளி, விளக்கு தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹிந்து புராணங்களில் வரும் விலங்குகளின் உருவங்கள் இந்த கோயிலில் சிற்பங்களாக வடிக்கப்பட்டது.  

இக்கோவில், கோட்டை போன்று கட்டப்பட்ட உயரமான சுற்றுச்சுவர் கடந்து உள்ளே நுழைந்தால் பெரிய வெளிப்பிராகாரம், இடப்புறத்தில் சிறிய குளமும், வலப்புறத்தில் பரிதாபமான நிலையில் மண்டபம் ஒன்றும் பழங்காலப் பெருமையை நினைவுபடுத்துகிறது. பலிபீடம் மற்றும் சிறிய கல் தூண் கடந்து அடுத்துள்ள மூன்று நிலை கோபுரத்தை வணங்கியவாறு நுழைந்தால் விசாலமான மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மார்க்க தர்ஷ்நேஸ்வரர்  லிங்கமும், ஆத்ம லிங்கமும் கண்டு கண்கள் குளமாகின்றன. 

இங்குள்ள லிங்கம் காலை வேளையில் செந்நிறமாகவும், நண்பகலில் வெண்மையாகவும் சந்தியா காலத்தில் தேன் நிறத்துடனும் காட்சி தருகிறது. அதன் எதிரில் அர்த்த மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று தியான் செய்யலாம். கருவறை முன் நின்று கைகூப்பி வணங்கும் போது, லிங்கத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் வாய்ந்த அலைகள் நம் உடலிலும் மனதிலும் ஒருவித பரவச நிலையை ஏற்படுவதை நீங்கள் உணரலாம். புராதன சிறப்பும், கட்டடக் கலையின் உன்னதத்தையும் உணர்த்தும் இதுபோன்ற ஆலயங்களை நாம் அனைவரும் பார்க்க வேண்டிய மிக அவசியம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close