மக்கள் தீர்ப்பு 2019: தேர்தலில் வெல்லப்போவது யார்? Newstm -ன் பிரத்யேக கருத்து கணிப்பு முடிவுகள்

  Newstm Desk   | Last Modified : 18 May, 2019 08:52 pm
exit-poll-result-exclusive-on-newstm

மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு, நாளையுடன் நிறைவடையும் நிலையில், கடந்த கால முடிவுகள், அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி சதவீதம், கூட்டணி பலம், கள நிலவரம், மக்கள் மனநிலை, முக்கிய பிரச்னைகள், வேட்பாளரின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த தேர்தலில், எந்த கட்சி வெற்றி பெறும், யார் மத்தியில் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது குறித்து, அரசியல் நிபுணரும், தேர்தல் கள ஆய்வாளருமான, திரு. சுந்தரம்.நாகராஜன், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட உள்ளார். 

நியூஸ்டிஎம் நிறுவனத்திற்காக பிரத்யேகமாக அவர் தயாரித்துள்ள கருத்து கணிப்பு முடிவுகள், 19ம் தேதி மாலை 6:00 மணி முதல், எங்கள் நிறுவனத்தின்  யூடியூப் மற்றும் பேஸ்புக் சேனலில், நேரடி ஒளிபரப்பு முறையில் வெளியாக உள்ளது. 

இதற்கு முன், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும், கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மற்றும் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளையும் மிகத் துல்லியமாக கணித்து தந்துள்ள நாகராஜன், இம்முறை, 2019ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் முடிவுகளையும் கணித்துள்ளார்.

மாநில வாரியாக, மண்டல வாரியாக, மாநிலங்களிலும், தேசிய அளவிலும், அரசியல் கட்சி மற்றும் வி.ஐ.பி., வேட்பாளர்களின் வெற்றி நிலவரம் குறித்து அவர் நேரடி ஒளிபரப்பு முறையில் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட உள்ளார். இவை, நியூஸ்டிஎம் வெப்சைட்டில், கட்டுரை வடிவிலும் வெளியாகும். 

 

23ம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகளை, தேர்தல் ஆணையம் வெளியிட உள்ள நிலையில், 19ம் தேதி முதலே, இது தான் முடிவாக இருக்கும் என, நாம் முன்கூட்டியே கூற இருக்கிறோம். அதே போல், 23ம் தேதி, அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளையும் வெளியிட உள்ளோம். நேயர்கள் இதை காணத்தவறாதீர். மேலும் விபரங்களுக்கு, இணைந்திருங்கள் www.newstm.in உடன். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close