ஊடகங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்

  பாரதி பித்தன்   | Last Modified : 19 May, 2019 08:24 pm
special-article-about-modi-and-media

இந்தியாவில் ஊகடங்கள், பத்திரிக்கைகள் விரும்பாத 2 பேர் ஜெயலலிதா, மோடி இவர்களுக்கு எதிராக எழுதாத பத்திரிக்கை, கல்யாண பத்திரிக்கையாகத் தான் இருக்க முடியும். முகம் அறியாத பத்திரிக்கைகள் கூட, இவர்களுக்கு எதிராக எழுதி பெயர் வாங்குகிறார்கள். 

முகமுடி அணிந்து கொண்ட இடதுசாரிகள், திராவிட சிந்தனை கொண்டவர்கள் பத்திரிக்கை, ஊடகங்களில் மறைந்து கிடப்பது தான் சாட்சி. இந்த பத்திரிக்கையாளர்களின் வீரம், இவர்களிடம் தான் செல்லுபடியாகும். நெருக்கடி நிலையின் போது, எக்ஸ்பிரஸ், துக்ளக், முரசொலி போன்ற ஒரு சில பத்திரிக்கைகள் தவிர்த்து, மற்றவர்கள் இருந்த இடமே தெரியாமல் இருந்தனர். இப்போது இவர்கள் தான் நாட்டிற்கு வழிகாட்டும் மெய்ப்பராக உருமாறிவிட்டனர்.

ஜெயலலிதாவை பொருத்தளவில், பத்திரிக்கைகளை சந்திப்பதையே தவிர்த்து விட்டார். இதனால் ஊடகங்கள் வெளிப்படுத்தும் பார்வைதான் உண்மையாக தெரிந்தது.  ஆனாலும் அவர்களை பொருட்படுத்தாமல் ஜெயலலிதா தன் பாதையில் நடைபோட்டார். கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டால் நாடு அவ்வளவு தான் என்ற பயம், ஜெயலலிதாவிற்கு ஊடக ஆதரவு இல்லாத குறையை போக்கியது.

மோடிக்கும் இதே நிலைதான். அவர் முதல்வராக இருந்த காலத்திலேயே, இந்த வெறுப்பு இருந்தது. குஜராத் முதல்வராக 3வது முறையாக வெற்றி பெற்ற போது, பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் கருத்துக் கணிப்புகளை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றீர்களே இது எப்படி நடந்தது என்று கேட்டார். 

அதற்கு மோடி நிருபரின் தொடையை தட்டி, அது கருத்துக்கணிப்பு என்று கூறாதீர்கள் உங்களின் விருப்பம் என்று கூறுங்கள் என பதில்சொன்னார். உண்மை இது தான். மீண்டும் ஆட்சிக்கட்டிலில் மோடி அமர்ந்து விடக் கூடாது என்பதை பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளை தொட்டு வணங்கி மோடி உள்ளே சென்ற போதே ஊடகங்கள், பத்திரிக்கைகள் முடிவு செய்து விட்டன. அதற்கு ஏற்றபடிதான் அவற்றின நடவடிக்கைகள் இருந்தன.

ஆனால் மக்களை சந்திக்க இந்த இடைத் தரகர்கள் எதற்கு என்று நினைத்த மோடி, மனதின் குரல் மூலம் நேரடியாக மக்களைத் தொடர்பு கொண்டார். சமூக ஊடகங்கள் மூலம் மக்களை நேரில் தொடர்பு கொண்டார். மக்களும் அவரை தொடர்பு கொண்டார்கள். இதன் காரணமாக பல திட்டங்கள் முடிவு செய்யப்பட்டன. 

சிலவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டது. மதுரை பெண் ஒருவர், பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி தன் வாழ்க்கைக்கு தேவையான உதவியை பெற முடிந்தது. நாடு முழுவதும் தனிப்பட்ட நபர்களை பிரதமர் அறிந்து மற்றவர்களுக்கு வெளிபடுத்த முடிந்தது.

இப்படி மக்களும், பிரதமரும் நெருங்கப் பழகி வருவதால் போலி ஊடகங்களின் தேவை அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இதை அப்படிப்பட்ட ஊடகங்கள் தான் புரிந்து கொள்ள வில்லை என்பதைத் தான் 18ம் தேதி வெளியான டெலிகாரப் பத்திரிக்கை காட்டுகிறது. அதன் முதல்பக்கத்தில் மோடியின் முகபாவனைகள் பலவற்றை வெளியிட்டு, பேட்டிக்காக இடம் ஒதுக்கி இருந்தோம். அவர் எதுவும் பேசவில்லை. அதனால் இந்த இடத்தை வெறுமையா விட்டுள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தது. இதைத் தவிர வேறு சில பத்திரிக்கைகளும் இதே பாணியை கடைபிடித்தது.

இது அந்த பத்திரிக்கையின் அராஜகப் போக்கு, அதன் அகம்பாவத்தை வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் பாஜ சார்பில் மோடி,அமித்ஷா ஆகியோரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பாஜகவில் அனைத்து அதிகாரமும் கொண்டவர் அதன் தலைவர் தான். அதை மோடியே பல முறை விளக்கி உள்ளார். இதன் காரணமாக அமித் ஷா பேட்டி கொடுத்தார். அதில் பார்வையாளராக மோடி இருந்தார். இந்த சூழ்நிலையை தான் ஊடகங்கள் அவ்வாறு விமர்சனம் செய்தன. 

தற்போது நடந்ததற்கு மாற்றாக மோடி பேசி இருந்தால், அவர் எப்படி ஒரு அரசியல் கட்சி சார்பாக பேசலாம் என்று கத்தி கூச்சல் போட்டு இருப்பார்கள். மேலும் தேவையில்லா விவகாரங்களை உருவாக்கி, நிகழ்ச்சியின் நோக்கத்தையே சீரழித்து விட்டு இருப்பார்கள். இந்த நோக்கம் கெட்டுவிட்டதே என்ற வயிற்றெரிச்சலின் வெளிப்பாடுதான் பக்கத்தை வெள்ளையாக விட்டது.  

தேர்தல் காலங்களில், 10க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து பேட்டியளித்தவர் மோடி என்பதை நினைத்து பார்த்தால் இவர்களின் அந்தரங்கம் தெரியும். .

இந்திராவாக இருந்தால் இது போன்ற செயலுக்கு மறைமுகமாக பலவித தொல்லைகளை சம்பந்தப்பட்டவர்கள் அனுபவித்து இருக்க வேண்டும். ஆனால், மோடி இதை புறக்கணித்துவிட்டார். இதனால் அவர்கள் அறிவு ஜீவிகளாக உலா வர முடிகிறது. இவர்களின் உண்மையை வாசகர்கள் உணர்ந்து புறக்கணிக்க தொடங்கினால் அறிவு ஜீவியாக மட்டும் அல்ல தொழில் நடத்த கூட முடியாது.

அது தான் தலைசிறந்த தலைவன் மாேடிக்கும், பிறருக்கும் உள்ள வேறுபாடு என்பதை இனியேனும் அவர்கள் உணர வேண்டும். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close