சாகசப் பயணிகள் விரும்பும் தண்டேலி சுற்றுலாத் தலங்கள்..!

  இளங்கோ   | Last Modified : 20 May, 2019 02:10 pm
thandeli-tourist-spot

கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள  ஒரு சிறு நகரம் தான் தண்டேலி. இந்த சிறு நகரத்தை  சுற்றிலும் மேற்குத்தொடர்ச்சி மலைகள் சூழ்ந்துள்ளன. சாகச பயணிகள்  பெரிதும் விரும்பும் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது. இந்தியாவிலேயே  ஆற்று மிதவைப்படகு சவாரிக்கு  மிகவும் புகழ்பெற்ற இடமாக தண்டேலி உள்ளது. 

இவை தலபுராணகதையில் தண்டேலி நகரம் தண்டகாரண்ய வனமாக அறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  இங்கு உறையும் தண்டேலப்பா எனும் கடவுல் பெயராலும் இப்படி அழைக்கப்படுவதாக  மக்களால் நம்பப்படுகிறது.  மற்றோரு புராணங்களில் இந்த பிரதேசத்தை ஆண்ட தண்டநாயகா மன்னன் இங்கு உள்ள வனத்தின் அழகால் ஈர்க்கப்பட்டதால் மன்னர் தன் பெயரை சூட்டி கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சுற்றுலாப்பயணிகள் தண்டேலி பகுதிக்கு அதிக அளவில் வரக்காரணம்,  இங்கு உள்ள தண்டேலி காட்டுயிர் சரணாலயம் தான். கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது பெரிய காட்டுயிர் சரணாலயமக விளங்குகிறது. 2007 ம் ஆண்டு இந்த சரணாலயம் புலிகள் பாதுகாப்பு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த இலையுதிர்காடுகளால் ஆன தண்டேலி காட்டுயிர் சரணாலயத்தில்  கானேரி ஆறு மற்றும் நாகஜாரி ஆறு எனும் இரண்டு ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன.  

இந்த ஆறுகள் காளி ஆற்றின் துணை ஆறுகளாகும். இந்த காட்டுயிர் சரணாலயம் பலவகையான வனவிலங்குகளின் உறைவிடமாக அமைந்துள்ளது.  தண்டேலி சுற்றுலா தலத்தில்  மிதவைப்படகு சவாரி, பரிசல் சவாரி, ஆற்று மிதவைப்படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை காளி ஆற்றில்உள்ளன.  இவை தவிர சைக்கிள் சவாரி, மலைப்பாதை சைக்கிள் சவாரி போன்ற பொழுதுபோக்குகளுக்கும் உகந்ததாக இது விளங்குகிறது. இயற்கை அம்சம் சார்ந்த பொழுது போக்கு இடமாக தண்டேலி விளங்குகிறது.

தண்டேலியில் குல்கி இயற்கை மையம், ஷிரோலி சிகரம், காளி ஆறு, உலாவி கோயில், ஸ்கைக்ஸ் பாயிண்ட்,  சுப்பா நீர்மின்சார நிலையம், காவ்லா குகைகள்,  சிந்தேரி பாறைகள், அன்ஷி தேசிய வனவிலங்கு பூங்கா பகுதிகளும் காணச் சிறந்தது. 

இந்த சரணாலயத்துக்கு  சுற்றுலா செய்ய உகந்த காலம் அக்டோபரிலிருந்து ஜூன் வரையிலான காலத்தை குறிப்பிடலாம். மேலும் திறந்த ஜீப்புகளில் வழிகாட்டியின் துணையுடன் பயணிகள் காட்டுச்சுற்றுலாவை மேற்கொள்ளலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close