பா.ஜ., காட்டிய பண்பாட்டை பிறரும் கடைபிடித்தால் நன்மை!

  பாரதி பித்தன்   | Last Modified : 28 May, 2019 07:22 pm
special-article-about-bjp-s-invitation-for-other-party-leaders

அடுத்த 5 ஆண்டுகள், மக்கள் நலத்திட்டங்களை, குரலற்றவன் குரலை ஒலிக்க வேண்டியவர்களை தேர்வு செய்வது தேர்தல். இதில் தங்களின் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனித்தோ, கூட்டணி அமைத்தோ முட்டி மோதுவது நியாயமான ஒன்று. இதில் ஒவ்வொரு தரப்பும் மற்றொரு தரப்பை விமர்சனம் செய்வது இயல்பான ஒன்றுதான். விமர்சனங்கள் என்றுமே விரோதிகளை வளர்க்க கூடாது. சீமான் போன்றவர்களை தவிர்த்து பலர் இந்த இலக்கணத்தின் படிதான் தேர்தலை எதிர்கொள்வார்கள். அவர்கள் பிரச்னைகளை மட்டும் அதை எதிர்நோக்கும் வழிமுறைகளை மட்டும் பேசுவார்கள். அதனால் தேர்தல் முடிந்த பிறகு அவர்களால் எவ்விதமான தயக்கமும் இல்லாமல் பழக முடியும்.

இதற்கு சமீபத்திய உதாரணம் டெல்லி தொகுதியில் ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் மனோஜ் திவாரி அவரை சந்தித்து ஆசி பெற்றதைக் கூறலாம். ஆசி பெற்ற மனோஜ் திவாரி பெரிய மனதுக்காரர் என்றார், ஷீலா தீட்சித் மிகப் பெரிய மனதுக்காரர் என்று நிரூபித்துவிட்டார்.

இந்த பண்பாடுதான் பாஜகவை மற்ற கட்சிகளிடம் இருந்த வேறு படுத்திக் காட்டுகிறது.

பெருந்தலைவர் காமராஜருக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமிதான் பிரதமர் வேட்பாளரை மொழிந்துள்ளார். ஜெயலலிதா, கருணாநிதிக்கு கூட கிடைக்காத அந்த பேறு, எடப்பாடியாருக்கு கிடைத்துள்ளது என்றால், அது பாஜகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. 

இத்தனைக்கும் காமராஜர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்ததைக் கவனத்தில் கொண்டால், அவர் அதிகாரிகள் தரப்பில் பதவி வழி உறுப்பினர் என்பதைப் போல, வேறு வழியில்லாமல் கூட அவர் பிரதமரை முன்மொழிய அனுமதித்திருக்கலாம். ஆனால் எடப்பாடியார் இப்போதுள்ள சூழ்நிலையில், இந்த மரியாதையை பெற்று இருப்பது பாஜகவை கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும்.

லோக்சபா தேர்தல் முடிவு அடிப்படையில், வழக்கமான அரசியல் கட்சியின் நடவடிக்கையாக இருந்தால், பாஜக தமிழக அரசியல் கட்சிகளை புறக்கணித்து இருக்க வேண்டும். அதிலும், தங்களை யார் தோற்கடித்தார்களோ, அவர்களை திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள். இந்த உலக வழக்கத்தை மீறி பாஜக, நடிகர் கமலை பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

இத்தனைக்கும்,  கமல் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை குறிப்பாக மோடியை அவ்வளவு கேவலமாக பேசினார். அதையெல்லாம் மறந்து தற்போது அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இதற்கு மோடி தகுதியான தலைவர் என்பது தான் காரணம். அதனால் தான் எவனும் தன் சீட்டை பிடிக்க முடியாது என்ற தைரியம் இருந்தால் தான் இப்படி செய்ய முடியும்.  அதிஷ்டவசமாக இது போன்ற நாற்காலியில் அமரும் தலைவர் எப்போ எவன் கவிழ்த்துவிடுவானோ என்ற நினைப்பிலேயே யாரையும் அணுகமாட்டார்.

தமிழகம் தான் பாஜகவை புறக்கணித்து விட்டது. ஆனால் தமிழக தலைவர்கள் அது போல இல்லாமல் பாஜகவின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

திருமணத்திற்கு வந்த விருந்தினர் போல பதவி ஏற்பு விழாவில் மட்டும் கலந்து கொண்டு பின்னர் தனித்து இயங்காமல், எப்போதும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை அமல்படுத்த முயல வேண்டும். அதுதான் உங்களை நம்பி ஓட்டுப் போட்ட தமிழக வாக்காளர்களுக்கு செய்யும் நன்றிக் கடனாக இருக்கும்.

அதைத்தாண்டி, பாஜகவின் பண்பாட்டிற்கு இணையானது தான் எங்கள் பண்பாடும் என்பதை உலகம் உணர்ந்து கொள்ள வழி செய்யும். இது நடக்குமா என்பது மோடியின் பதவி ஏற்பு விழா புரியவைத்துவிடும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close