மக்களவை தேர்தல் சுனாமியில் தானே சரியும் எதிர்கட்சிகளின் சாம்ராஜ்யம்!

  பாரதி பித்தன்   | Last Modified : 29 May, 2019 03:37 pm
special-article-about-karnataka-madhya-pradesh-and-rajasthan-assemblies

கர்நாடகா சட்டசபைத் தேர்தலில், பாஜகவை அம்மாநில மக்கள் தேர்வு செய்தனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று ஏற்க வேண்டிய எதிர்கட்சிகள், மைனாரிட்டி அரசாக கூட பாஜகவை ஆட்சி செய்யவிடவில்லை. 2018ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், 104 இடங்களில் பாஜக, 78 இடங்களில் காங்கிரஸ், 37 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரு இடத்தில் பகுஜன் சமாஜ், சுயேட்சைகள், கேபிஜேபி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

கவர்னர், பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த பின்னர் கூட, சட்டசபையில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்காமல், அந்த அரசை தோல்வியடைய செய்தன. மற்றொரு திருப்பமாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. 

அதிலும் 78 இடங்களை பிடித்த காங்கிரஸ் ஆட்சி செய்யாமல், வெறும் 37 இடங்களை மட்டுமே பிடித்த மதசார்பற்றஜனதா தளத்தை ஆட்சியில் அமர்த்தி ஆதரவு தெரிவித்தது.

இதை மக்கள் தங்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றிவிட்டதாகவே கருதினர். அதிலும், காங்கிரஸ் கட்சி நம்பிக்கை துரோகம் செய்து ஆட்சியில் அமர்ந்து இருப்பதாகவே கருதினர். மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில்,  பாஜக, 25 இடங்களையும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா, மற்றும் பாஜ ஆதரவு சுயேட்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

அதிலும் தேவேகவுடா, அவர் பேரனும், முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் ஆகியோர் தோற்றது மக்களின் கோபம் எந்தளவுக்கு உள்ளது என்பதை காட்டுகிறது.

இதை நன்கு உணர்ந்த அரசியல் வாதிகள், தற்போது காங்கிரஸ் உட்பட தங்களின் கட்சியை விட்டு வெளியேறும் முயற்சியில் உள்ளனர்.

முதற்கட்டமாக, மேற்கு வங்க மாநிலத்தில் 2 எம்எல்ஏகள், மற்றும் 50 கவுன்சிலர்கள் விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின போதே திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என மோடி அறிவித்தார். அது உண்மை என்பதை இந்த சம்பவம் வெளிபடுத்த தொடங்கி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர்கள், உதய் லால் அஞ்சனா, ரமேஷ் மீனா ஆகியோர் தெரிவித்துள்ளனர். தோல்விக்கு பொறுப்பேற்று, வேளாண் துறை அமைச்சர் லால்சந்த் கட்டாரியா ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. தன் மகனுக்கு இடம் ஒதுக்க கோரி வற்புறுத்தினார் என கட்சியின் மூத்த தலைவர்கள் மீது ராகுல் குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது. 
 
இது போன்ற சூழ்நிலை ராஜஸ்தான் அரசை நிலை குலையச் செய்துள்ளது. தானே அந்த அரசு கவிழும் போது ஆட்சி அமைக்க பாஜக தன்னை வலுப்படுத்தி கொண்டு வருகிறது.

மத்திய பிரதேசத்திலும் இந்த நிலைதான் உள்ளது. ஏற்கனவே முதல்வர் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே தலைமுறை இடைவெளியால் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை எதிர்பார்த்த ஜோதிராதித்ய சிந்தியா ஏமாற்றப்பட்டார். லோக்சபா தேர்தல் முடிவில் ஓபிஎஸ் மகன் போலவே, கமல்நாத் மகன் மட்டும் வெற்றி பெற்று மற்றவர்கள் தோல்வியை தழுவினர். தேர்தல் போது பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை காங்கிஸ் கட்சியில்சேர்த்தது இப்போது அவர்கள் உறவு  இடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர்கள் மாற்றப்பட்டால் தற்போதுள்ள ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செயல்படுத்தினால், அசோக் கெலாட், கமல்நாத் ஆகியோர் எதிர்ப்பையோ, செயல்படுத்தாவிட்டால் சச்சின் பைலட், சிந்தியா எதிர்ப்பையோ காங்கிரஸ் கட்சி சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாஜக, காங்கிரஸ் இடையே விரல் விட்டு எண்ணும் அளவில் தான் எம்எல்ஏ எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களால், காங்கிரஸ் கட்சி தானே ஆட்சியை இழக்கும். அப்போது ஒரு சில எம்எல்ஏகள் கட்சி மாறினால் கூட பாஜக ஆட்சியை பிடிக்கும்.

லோக்சபா தேர்தல் நிலையான முடிவைத் தந்துவிட்டதால், அப்போது வீசிய அரசியல் சுனாமி எதிர்கட்சிகளை புரட்டிப் போடத் தொடங்கி உள்ளது. பிரதமர் பதவி ஏற்றபின்னர், அமைச்சரவை முடிவுக்கு பின்னர் எத்தனை எதிர்கட்சிகளின் ஆட்சி நீடிக்கும், அல்லது வீழ்ச்சி பெறும் என்பது தெரிய வரும்.

இதற்காக, பாஜக எவ்வித முயற்சியும் மேற்கொள்ள தேவையில்லை. அந்த அரசுகள் தானாகவே கவிழும். 

neewstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close