மாேடி சர்க்கார் 2.0: மத்திய அமைச்சர்களின் மறுமுகம்!

  விசேஷா   | Last Modified : 31 May, 2019 05:11 pm
modi-sarkar-2-0-background-details-about-cabinet-ministers

மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள, பிரதமர் நரேந்திர மாேடி, பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி, தேசிய ஜனநாய கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களையும், மத்திய அமைச்சராக்கியுள்ளார். 
அவர்களில் சிலர் எம்.பி.,க்களாக இல்லாதவர்களும் உள்ளனர். மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பேற்றுள்ள ஒருவர், தமிழக பாரம்பரியத்தை சேர்ந்தவர். எனினும், இதற்கு முன் எந்த தேர்தலிலும் போட்டியிடாதவர். அவர் ராஜ்யசபா எம்.பி.,யும் அல்ல. யார் அவர்? அவர் தான் மத்திய வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எஸ்.ஜெய்சங்கர். 

அவருக்கு எப்படி இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. அவர் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவரா? ஆம்... ஜெய்சங்கர் மட்டுமல்ல, மாேடி சர்கார் 2.0ல் இடம் பெற்றுள்ள, முக்கிய அமைச்சர்கள் பலர் பற்றிய விபரங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் பிரதமர் நரேந்திர மாேடியிலிருந்து துவங்குவோம். 

ராஜ்நாத் சிங் (67) - பாதுகாப்பு அமைச்சர் 

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர். முன்னாள் பிரதமர்  வாஜ்பாய் அமைச்சரவையில், மத்திய விவசாயத்துறை அமைச்சராக பணியாற்றியவர். வாஜ்பாய்க்குப் பின், லக்னோ தொகுதியில் போட்டியிட்டு வென்றனர். அதற்கு முன், உத்தர பிரதேச மாநில முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 
நரேந்திர மாேடி தலைமையிலான முதல் ஐந்து ஆண்டு ஆட்சியில், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது, மாேடி சர்க்கார் 2.0ல், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 
நாட்டின் பலம் வாய்ந்த முக்கிய துறைகளான உள்துறை மற்றும் பாதுகாப்பு துறையை கவனிக்கும் வாய்ப்பு பெற்ற வெகு சிலரில் ராஜ்நாத் சிங்கும் ஒருவர். 

இதே போல், மாேடி சர்க்கார் 2.0வில் இடம் பெற்றுள்ள முக்கிய அமைச்சர்களின் பின்புலம் குறித்து வரும் தொடர்களில் காணலாம். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close