மாேடி சர்க்கார் 2.0: அமித் அனில்சந்திர ஷா!

  விசேஷா   | Last Modified : 31 May, 2019 05:33 pm
modi-sarkar-2-0-background-details-of-amit-shah

அமித் அனில்சந்திர ஷா (54) - மத்திய உள்துறை அமைச்சர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கல்லுாரி காலம் முதலே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும், ஏபிவிபியில் இணைந்து பணியாற்றியவர். பின் பாஜவில் இணைந்து, குஜராத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை முடிக்கு கொண்டு வர பாஜ நடத்திய அரசியல் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். 

காந்திநகர் மக்களவை தொகுதியில் அத்வானியின் வெற்றிக்காக, பிரசாரம் செய்தார். குஜராத் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான இவர், நரேந்திர மாேடி முதல்வரான போது, மாநிலத்தின் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் மூலம், மாநிலத்தின் இளம் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். 

இவரது தொடர் அரசியல் பணிகளால், மாநிலத்தில் பாஜ மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. நரேந்திர மாேடியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் எப்போதும் முதலிடம் பிடிக்கும் தலைவராக உயர்ந்தார். 

அதன் காரணமாக, ஒரு கட்டத்தில், குஜராத் மாநிலத்தின், உள்துறை, சிறைத்துறை, எல்லை பாதுகாப்பு, கலால் வரி, போக்குவரத்து, கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாடு நிதி உள்ளிட்ட முக்கிய, 12 துறைகளின் அமைச்சராக ஒரே சமயத்தில் பொறுப்பு வகித்தார். 

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற அவர், 2017ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார். அதன் பின், முதல் முறையாக, 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். 

பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில், கேபினட் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு, பிரதமருக்கு அடுத்ததாக கருதப்படும், துணைப் பிரதமர் அந்தஸ்த்துக்கு இணையான, உள்துறை அமைச்சகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம், நரேந்திர மாேடி, குஜராத் முதல்வராக இருந்த போது, அமித் ஷா,  மாநில உள்துறை அமைச்சராக இருந்தது போலவே, தற்போது, நரேந்திர மாேடி பிரதராக இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close