மாேடி சர்க்கார் 2.0: நிதின் ஜெய்ராம் கட்கரி 

  விசேஷா   | Last Modified : 31 May, 2019 06:02 pm
modi-sarkar-2-0-nitin-jairam-gatkari

நிதின் ஜெய்ராம் கட்கரி (62) - மத்திய தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர்

பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான, 2014 - 2019 வரையிலான ஐந்து ஆண்டு கால ஆட்சியில், மத்திய கப்பல், தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், நிதின் கட்கரி.  மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். ஏபிவிபி மற்றும் பாஜ யுவா மாேர்சாவில் இணைந்து பணியாற்றியவர். 

மஹாராஷ்டிரா மாநில பாஜ தலைவராக இருந்தவர். அந்த மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பு வகித்த இவர்,  2014ம் ஆண்டு, நாக்ப்பூர் தொகுதியில் இருந்து, மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதன் பின், பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான அமைச்சரவையில், 2014 - 2019 வரை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை, தரைவழி போக்குவரத்து துறை, கிராமப்புற மேம்பாட்டுத்துறை, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் வளத்துறை, கங்கை நதிநீர் துாய்மைபடுத்தும் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தார். 

2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நாக்ப்பூர் தொகுதியிலிருந்து மீண்டும் மக்களவைக்கு தேர்வான இவர், இம்முறையும், தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு, குறு, மற்றும் நடுத்தர ரக தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close