மாேடி சர்க்கார் 2.0 : சதானந்த கௌடா

  விசேஷா   | Last Modified : 31 May, 2019 06:31 pm
modi-sarkar-2-0-sadanatha-gowda

சதானந்த கௌடா (65) -  மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர், சதானந்த கௌடா. ஜனசங்க காலம் முதலே அந்த கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருபவர். பின் பாரதிய ஜனதா கட்சியின் யுவா மாேர்சாவில் சிறப்பாக செயல்பட்டவர். 

கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராக தன்னை உயர்த்திக் கொண்ட இவர், 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்முறையாக எம்.பி.,யானார். கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர், மாநில முதல்வர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 

ஏற்கனவே, 2014 - 2019 வரையிலான மத்திய அமைச்சரவையில், புள்ளியில் மற்றும் திட்டங்கள் அமலாக்கம், சட்டத்துறை, ரயில்வே உள்ளிட்ட துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது, 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், மீண்டும் மத்திய அமைச்சர் பதவியை பிடித்துள்ள இவருக்கு, ரசாயனம் மற்றும் உரத்துறையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close