அழகிய கோகர்னா கடற்கரை...!

  இளங்கோ   | Last Modified : 06 Jun, 2019 10:44 am
kokarna-beach-special-story

கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோகர்ணா நகரம் முதலில் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இது அகனாஷினி மற்றும் கங்காவலி என்ற இரண்டு ஆறுகள் ஒன்று சேருமிடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறுகள் சேருமிடம் ஒரு பசுவின் காதைப்போல் காணப்படுவதாலேயே இந்த நகருக்கு கோகர்ணா என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சிவனருளால் பிருத்வி என்ற பசுவின் காதிலிருந்து இந்த இடம் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது.

கர்நாடகாவின் கடற்கரை நகரமான கோகர்னா இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சுற்றுலா தலம் ஆகும். இங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்  மிக அதிக அளவில் வருகின்றனர்.மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களும் உள்ளன. குட்டி தீவுகளை போல கடலுக்கு உள்ளே செல்லும் திட்டுகள், குன்றுகள் என வளைந்தும் நெலிந்தும் அழகூட்டி அமைந்துள்ளது கோகர்னா கடற்கரை. 

இதன் கரையை ஒட்டியுள்ள மேற்குதொடர்ச்சி மலையும் பாறைகளும் ஒரு பெரிய ஏரி அளவிலான கடலை கைப்பற்றி, அதற்கு பாதுகாப்பு நுழைவாயிலாகவும் அமைந்துள்ளது. அதற்கு, அப்பால் அரபிக்கடல் உள்ளது. இந்த அதிசய அமைப்பு வேறு எந்த கடற்கரையிலும் இல்லை. இதில் ஒரு பகுதி வடிவத்தின் காரணமாக, ஓம் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த கோகர்னா கடற்கரை பல பெயர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  அவற்றில், முதன்மை பீச்,கடல் பீச், ஆஃப் மூன் பீச், ஃபுல் மூன் பீச் அல்லது பாரடைஸ் பீச், ஓம் பீச், நிர்வணா பீச்  இவை மென்மையான பொடி மணலை கொண்டுள்ளது. இதில் உள்ள சில கடற்கரைகளுக்கு நடந்தும் படகுகளிலும் செல்லலாம்.மெயின் பீச் வடக்கு நோக்கியும் மற்ற 4 பீச்களும் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

இங்கு இந்தியாவின் 7 முக்கியமான இந்துக்களின் பக்தி மையங்களில் கோகர்னாவும் ஒன்று.  இங்குள்ள மஹாபலேஸ்வரா கோவில் இந்தியாவில் உள்ள முக்கியமான சிவன்கோவிலாகும். இங்குள்ள ஆத்மலிங்கம் மிக சிறப்புடையது, இதுதான் சிவபெருமானுடைய உண்மையான தோற்றமாகவும் கருதப்படுகிறது. இங்கு சிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு சுற்றுலாவுக்காக மட்டுமின்றி ஆன்மீகத்துக்காகவும் மக்கள் இங்கு  வருகின்றனர். கங்காவாளி, அகனாஷினி என்ற இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த ஊர் உள்ளது.  

தென்னை, வாழை மரங்கள், நீல கடல், சுத்தமான மணற்பரப்பு, இருபுறமும் வீடுகளையும் கடைகளையும் கொண்ட எளிமையான தெருக்கள், கடற்கரையோர பகுதிகளில் தங்கிச்செல்ல வாடகைக்கு விடப்படும் குடிசைகள் என ஒரு தனி உலகத்துக்கு சென்ற இனிய அனுபவம் கிடைக்கிறது. இங்கு கன்னடம் தாய்மொழியானாலும் கொங்கனி பேசுபவர்களே அதிகம் உள்ளனர். கடற்கரை மற்றும் ஆன்மீக விரும்பிகளுக்கு இந்த இடம் ஒரு சிறந்த சுற்றுலா விருந்தாக இருக்கிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close