பூவார் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களும்...!

  இளங்கோ   | Last Modified : 07 Jun, 2019 09:39 am
poovar-beach-and-tourist-places

கேரள  மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த விழிஞ்சம் இயற்கை துறைமுகத்தின் அருகில் உள்ளது பூவார் கிராமம். பூவார் என்பது தென்னிந்தியாவின்  ஒரு சுற்றுலாத்தலமாகும். இந்த கிராமம் கடற்கரை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. பூவார் பீச் பயணிகளிடையே மிகப் பிரபலமானது. 

இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது. பூவார் கிராமம் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதற்கு மூல காரணம் பூவார் பீச்தான். இங்கு  வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாறுபட்ட காட்சியை அளிக்கும் இந்த கடற்கரையின் அமைதியை  பெரும்பாலான பயணிகள் விரும்புவார்கள். இந்த கிராமத்திற்க்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால் சத்தம், கூச்சல் ஏதும் இல்லாத அமைதியான அற்புத சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பூவார் கடற்கரையையும், கோவளம் கடற்கரையையும் நெய்யார் நதியின் முகத்துவாரம் பிரிக்கிறது. 

இந்த முகத்துவாரத்தில் கடல், ஏரி மற்றும் நதி என்று மூன்றின் நீரும் ஒன்றாக கலக்கும் அபூர்வ காட்சியையும் காணலாம்..   பூவார் கிராமத்தில் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் காணலாம். இங்கு சூரிய உதயம், அஸ்த்தனம் பார்த்து ரசிக்கும் அலாவதியான பயணமாக இருக்கும் .இந்தியாவில் முகாலய படையெடுப்புக்கு முன்பே இஸ்லாமியத்தை போதித்த பழம்பெரும் பகுதியாக பூவார் கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.

18-ம் நூற்றாண்டில் பூவாரில் உள்ள கல்லாரிக்கல் தாரவாட் என்று அழைக்கப்படும் ஒரு இல்லத்தில்  போக்கு மூசா மரைக்கர்,வசித்து வந்தார்.   இவர் பல முறை திருவிதாங்கூர் மன்னர் (மார்த்தாண்ட வர்மா) தனது எதிரிகளிடமிருந்து தப்பித்து வந்த மார்த்தாண்ட வர்மாவுக்கு  தனது இல்லத்தில் வாழ இவர் அடைகளம் கொடுத்தார். அந்த சமயத்தில் பூவார் கிராமம் பயிற்ச்சி பெற்ற ராணுவத்தையும், சர்வதேச சந்தையுடன் வர்த்தக உறவுகளையும், கப்பல்களையும் கொண்டிருந்தது.  

இங்கு பூவார் என்ற பெயர் தோன்ற முக்கிய காரணம் மார்த்தாண்ட வர்மா தொடர்பான கதையே.  முன்பு எல்லாம்  இது போக்குமூசாபுரம் என்று அழைக்கப்பட்டது.  சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஒரு இடமாக பூவார் விளங்குகிறது. அமைதியான முறையில் இயற்க்கையின் அழகை ரசிக்க வேண்டுமா வாருங்கள் பூவார் சுற்றுலா தலங்களுக்கு. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close