உத்தரகண்ட் மாநிலத்தின் மூசூரி... பெயர்க் காரணம் என்ன..?

  இளங்கோ   | Last Modified : 07 Jun, 2019 12:51 pm
musoorie-special-story

உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி. மூசூரி என்று பெயர்வர காரணம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்… மன்சூர் என வழங்கப்படும் ஒரு வகை மூலிகைச் செடி இங்கு அதிக அளவில் விளைந்து வருகிறது. அந்த மன்சூர் நாளடைவில் மூசூரி என மருகி அதை வைத்தே  இவ்விடத்திற்கு மூசூரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. என்றே அழைக்கிறார்கள். அதோடு மலைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. 

இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம். மேலும் மத ஸ்தலங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற குன்றுகளான கன், லால் மற்றும் நாக் ஆகியவை அமைந்திருக்கின்றன. 

கன் ஹில் குன்று :
முசூரியின் இரண்டாவது உயரமான மலை உச்சியான இவ்விடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முசூரியின் தண்ணீர் தொட்டி கன் ஹில்லில் அமைந்துள்ளது. ரோப் காரில் கன் ஹில்லுக்கு பயணப்படுவதை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.

லால் டிப்பா குன்று:
முசூரியின் லால் டிப்பா மலை உச்சியே, இங்கு மிகவும் உயரமான முனையாக கருதப்படுகிறது. லால் டிப்பா பகுதியில் டிப்போ எனப்படும் சேகரிப்பு மையம் அமைந்துள்ளதால் டிபோட் ஹில் என்றும் அழைக்கப்படுகிறது.இங்கு அனைந்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் டவர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவ முகாமும் இந்தக் குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இங்கு தொலைநோக்கி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கி வழியாக பந்தர்பஞ்ச், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களை கண்டு ரசிக்கலாம்.

நாக் டிப்பா குன்று:
முசூரியில்  உள்ள நாக் டிப்பா குன்று பகுதியில்  சுற்றுலாப் பயணிகள் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழலாம். மேலும் இங்கு அமைந்திருக்கும் அழகிய நீர்வீழ்ச்சிகளான கெம்ப்டி நீர்வீழ்ச்சி, ஜாரிபானி நீர்வீழ்ச்சி, பட்டா நீர்வீழ்ச்சி மற்றும் மொசி நீர்வீழ்ச்சி ஆகியவை புகழ்பெற்றவைகளாகும். நீர்வீழ்ச்சிகள் முசூரி வரும் சுற்றுலாப்பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது.  மலையேற்றத்திற்கும் புகழ்பெற்ற இடமாக முசூரி விளங்குகிறது.இயற்கை சூழலில் நடப்பதற்கு உகந்த பல பாதைகளையும் மூசூரி கொண்டுள்ளது. எல்லா பருவங்களிலும் முசூரி அழகுடன் விளங்குவதாலும் வருடத்தின் எல்லா மாதங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். 

இங்கு காணவேண்டிய இடங்கள் :
இயற்கை எழில் வாய்ந்த இம்மலைப்பகுதி, இங்குள்ள பழங்கால கோவில்கள், நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. ஜ்வாலா தேவி கோவில், நாக தேவதை கோவில் மற்றும் பத்ராஜ் கோவில் ஆகியவை இங்குள்ள புகழ்பெற்ற கோவில்களாகும். இங்கு அமைந்திருக்கும் அழகிய நீர்வீழ்ச்சிகளான கெம்ப்டி நீர்வீழ்ச்சி, ஜாரிபானி நீர்வீழ்ச்சி, பட்டா நீர்வீழ்ச்சி மற்றும் மொசி நீர்வீழ்ச்சி ஆகியவை புகழ்பெற்றவைகளாகும்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close