ஆர்ப்பரித்துக் கொட்டும் சூச்சிப்பாறை அருவி...!

  இளங்கோ   | Last Modified : 07 Jun, 2019 12:26 pm
soochiparai-falls-special-story

கேரளா மாநிலம் வயநாடு என்றாலே முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை மிகு அழகை பார்க்கலாம். இவை பிரசித்தி பெற்ற சுற்றுலாப்பிரதேசமாக அறியப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ளது. வயநாட்டின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி. 

மெப்பாடி நகருக்கு அருகே சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. இலையுதிர் மற்றும் பசுமையான காடுகளின் மத்தியில், மூன்றடுக்குகளாக அமைந்திருக்கும். ஆகையால் இந்த நீர்வீழ்ச்சி மூன்று நீளமான நீர்வீழ்ச்சிகளை கொண்டுள்ளது. 300 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியின்  அழகு, பெருமை, அமைதி அனைத்துமே இயற்கை கொடுத்தல் ஒரு விதத்தையே கருதப்படுகிறது.இவை  காவலாளி பாறை என்று பிரபலமாக அறியப்படுகிறது. சூச்சிப்பாறை அருவியின் மூன்று நீட்சிகளில், இரண்டு மீன்முட்டி அருவியிலும், மற்றொன்று கந்தன்பாறை அருவியிலும் விழுகின்றன. அதன் பிறகு இவை சாளியார் நதியுடன் இணைகின்றன. சரி மீன்முட்டி அருவி என பெயர்வர காரணம் என்ன தெரியுமா! வாருங்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். 300 அடி உயரத்திலிருந்து விழும் மீன்முட்டி அருவி கேரளாவின் 2-வது மிகப்பெரிய அருவியாக அறியப்படுகிறது. 

இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக ‘மீன்களை தடை செய்யும் பகுதி’ என்ற அர்த்தத்தில் இந்த அருவி மீன்முட்டி அருவி என்று அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள்  மீன்முட்டி அருவியின் அழகையும் கண்டு ரசிக்கலாம். மேற்கண்ட மூன்று நீட்சிகளும் சேரும் இடம், ஒரு சிறிய குளத்தை உண்டாக்குகிறது. இந்தக் குளத்தில் பயணிகள் படகுப் பயணம் செல்வதோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சுற்றுலா பயணிகள் குளத்து நீரில் நீந்தலாம்.  சூச்சிப்பாறை அருவியை 2 கிலோமீட்டர் நெடுந்தூர நடைப்பயணம் மூலம் பசுமையான தேயிலை தோட்டங்களையும் காடுகளையும் கடந்து அடையும் அனுபவம், உங்கள் நினைவில் பசுமை மாறாமல் அப்படியே நிலைத்திருக்கும். 

மேலும் இங்கு பயணிகளுக்காக மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்களில் இருந்து அருவியின் அழகையும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டத்தையும் தாராலமாக கண்டு ரசிக்கலாம். இந்த இடத்திற்கு கேரளாவில் உள்ள கல்பெட்டா நகரில் இருந்து மெப்பாடிக்கு சென்று அங்கிருந்து சூச்சிப்பாறைக்கு செல்லலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close