இயற்கை ரசிப்பவர்களுக்கு வரப்பிரசாதம்...சராஹன் !

  இளங்கோ   | Last Modified : 09 Jun, 2019 10:42 am
sarahan-special-story

இமாச்சலப் பிரதேசத்தின், சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது சராஹன்.  இயற்கையை ரசிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் சராஹன். இவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 5155 உயரத்தில் அமைந்துள்ள இவ்விடம், ஆப்பிள் தோட்டங்கள், பைன் காடுகள், சிறு நீரோடைகள், பழமையான அமைப்புகள் மற்றும் ஓட்டு வீடுகள் போன்றவற்றால் புகழ்பெற்று விளங்குகிறது. சராஹன் தொடர்பாக பல புராணங்கள் உள்ளன.

ஒரு புராணப்படி, குலு மன்னர், அண்டை பேரரசான புஷைர் மீது போர் பிரகடனம் செய்ததில் புஷைர் மன்னர் போரில் வெற்றி பெற்று குலு மன்னனின் தலையை துண்டித்தார். தலையை எடுத்து கொண்டு சராஹானில் உள்ள மக்கள் முன் அவர்களது குடும்பம் தலையை கேட்டது. அதற்கு புஷைர் மூன்று நிபந்தனைகளை விதித்தார். நிபந்தனைகளுக்கு இணையாக, இறந்த மன்னரின் குடும்பம் அவருக்கு ஒரு கோரிக்கையை வைத்தது. இதில் புஷைரின் அரசர்கள் வருடந்தோறும் தசரா விழாவை கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க இப்பகுதியில் தசரா, ஒரு முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. 

சராஹனுக்கு மத்தியில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:

பீமகாளி கோவில் வளாகம், பறவைகள் பூங்கா மற்றும் பாபா பள்ளத்தாக்கு, பஞ்சாரா ரெட்ரீட்,கெளரா,தரன்கதி, ஜியோரி, ஸ்ரீகண்ட் மகாதேவ்,ராஜா புஷைர் அரண்மனை, போன்றவை குறிப்பிடத் தகுந்தவையாகும்.  மிகவும் மழமையான பீமகாளி கோவிலின் கட்டிடகலை  இந்திய மற்றும் புத்த கட்டிடகலை பாணியில் உள்ளது. நீர்த்தேக்க ஏரி மற்றும் ஆல்பைன் புல்வெளிகள் போன்றவற்றால் ஒரு மயக்கும் இயற்கைக்காட்சி கொண்ட பாபா பள்ளத்தாக்கு, இமச்சல பிரதேசத்தின் தேசிய பரவைகள், சிவனுக்கு அற்ப்பணிக்கப்பட்ட கோவிலாக ஸ்ரீகண்ட் மகாதேவால்  கோவில் உள்ளது. 

இதன் அருகில் உள்ள ஜியோரியில் வெந்நீரூற்று ஒன்று உள்ளது. இவையெல்லாம் காணவேண்டிய முக்கிய இடமாகும்.   சராஹனுக்கு செல்ல விரும்பும் பயணிகள், சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் மூலமாக செல்லலாம். இந்த இடத்திற்கான பயணத்தை ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் திட்டமிடுவது சிறந்தது எனினும், மற்ற நாட்களிலும் இவ்விடத்தை சுற்றி பார்க்கலாம்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close