குட்டி சுவிட்சர்லாந்து எங்கு உள்ளது தெரியுமா..?

  இளங்கோ   | Last Modified : 10 Jun, 2019 10:02 am
little-switzerland-in-india-special-story

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் ஒரு அழகிய சுற்றுலா தலமாக விளங்குகிறது சோப்தா. இவை  கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் இந்துக் கடவுளான சிவபெருமானுக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ள துங்கநாத் மலைத்தொடரில் அமைந்துள்ள துங்கநாத் கோயில், புராதன கோயில்களில் ஒன்றாக உள்ளது.

இவை கோவில் உலகிலுள்ள சிவன் கோயில்களுள் மிக உயரமான கோவிலாக கருதப்படுகிறது. கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும் புக்யால்ஸ் என்றழைக்கப்படும் செழுமையான பச்சைப் புல்வெளிகளைக் கொண்டிருப்பதினால் இந்த இடம்  குட்டி சுவிட்சர்லாந்து  என்று மற்றோரு பெயராலும் அழைக்கப்படுகிறது.

இந்த இடத்தில்  இந்து காப்பியமாகிய இராமாயணத்தில் இராமனின் எதிரியாக பாவிக்கப்படும் இராவணன், தன் பாவங்களை எண்ணி வருந்தியதாகக்  இந்துப் புராணங்களில் கூறப்படுகிறது.  மலை மீது ஏறி சென்று சோப்தாவிலிருந்து துங்கநாத் கோயிலை அடையலாம்.  இங்கிருந்து சௌகும்பா, திரிசூல் மற்றும் நந்தி தேவி ஆகிய மலைத்தொடர்களின் அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு  ரசிக்கலாம். இங்கு மற்றுமொரு ஆன்மிக தலமாக கேதார்நாத் மந்திர் விளங்குகிறது. இவை மந்தாகினி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. 

இங்கு பெரிதும் இந்து ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். மேலும், சுமார் 200 சிவன் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. சோப்தாவின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், சுற்றுலாப் பயணிகளை, கவர்ந்திழுக்கக்கூடியதாக உள்ளன. மேலும், இது பஞ்ச் கேதார்க்கு செல்லும் மலையேற்றப் பயணிகளின் அடிவார முகாமாகவும் உபயோகிக்கப்படுகிறது. 

சோப்தாவுக்கு செல்ல புது டெல்லியில் இருந்து  சுற்றுலாப் பயணிகள், வான் வழி, இரயில் வழி அல்லது சாலை வழி போக்குவரத்து சேவைகளின் மூலம் சோப்தாவை அடையலாம்.  இங்குள்ள மத்யமகேஷ்வர் கோயில், கல்பேஷ்வர் மந்திர் மற்றும் கஞ்சுலா கோரக், கஸ்தூரி மான் சரணாலயம் ஆகியவையும் பெயர் பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு மழைக்காலங்கள் மற்றும் கோடைகாளங்களில்  இந்த அழகிய  சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு உகந்த காலங்களாகக் கருதப்படுகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close