தர்மச் சத்திரம் அல்ல இந்தியா: அமித் ஷா

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 10 Jun, 2019 03:46 pm
india-is-not-a-dharma-chatra-amit-shah

‛‛அந்நிய தேசத்தினர் சட்ட விரோதமாகக் குடியேற, இந்தியா ஒன்றும் தர்ம சத்திரமல்ல’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருப்பது, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை.

நம் நாட்டில், அந்நிய தேசத்தினர் சட்டவிரோதமாகக் குடியேறி வருகின்றனர். சராசரி குடிமக்களுக்கு, இதன் தாக்கம் இப்பாேதைக்கு தெரிய வராது. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தை இப்பொழுதே பாதிக்கக் கூடிய ஓர் அம்சமாகவும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விசயமாகவும், தேசத்தின் கலாச்சார சீரழிவிற்கான அடித்தளமாகவும் அமைந்து விட்டது. ஆம்! இது ஓர் எதிர்கால யூகம் அல்ல! நடந்து கொண்டிருக்கும் பேரழிவு.

இதுவரை குறைந்தது, நான்கு கோடி அந்நியர்கள் சட்டவிரோதமாக நம் நாட்டில் குடியேறியுள்ளனர். சராசரியாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பளம் என்றால், ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் இவர்களுக்கான சம்பளமாக செலவிடப்படுகிறது. இதில், ஐந்தில் இரண்டு பாகத்தினை அவர்கள் இங்கேயே செலவிட்டாலும், குறைந்தது ஒரு வருடத்திற்கு 3,00,000 கோடி ( மூன்று லட்சம் கோடி) ரூபாய் சட்ட விரோதமாக, கள்ளப்பணமாக நம் நாட்டை விட்டு வெளியேறுகிறது. 

இது எவ்வளவு பெரிய பொருளாதாரச் சேதாரம் என்றால், நம் நாட்டின் பாதுகாப்புக்காக, ஒரு வருடத்திற்கு நாம் ஒதுக்கிய பட்ஜெட் அளவு. அதாவது, ராணுவம், விமானப்படை, கடற்பபடை எல்லை பாதுகாப்புப் படை போன்ற அனைத்துக்குமான சம்பளம், தளவாடங்கள் தயாரிப்பு, ஆராய்ச்சிக்கான செலவு உள்ளிட்ட அனைத்தையும் செய்து விடக் கூடிய அளவு பணத்தை, இப்படி அநாவசியமாகக் கள்ளப்பணமாக வெளியே போவதைப் பார்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முறையற்ற பணப் போக்குவரத்து ஏற்படுவதால், அதாவது இங்கே சம்பாதித்து அந்தப் பணத்தை வங்கிகள் வழியாக இல்லாமல், ‛குருவி’ போன்ற சட்டவிரோத பரிவர்த்தனைகளால் நடைபெறுவதால் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டிற்குள் வராது போய் விடும். அதே நேரத்தில், நாட்டின் கருப்புப் பணம் அதிகரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. இது நிச்சியம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான பெரும் சவால் தான்.

 மேலும், அரசாங்கம் தன் குடிமக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் பணத்தை ஓட்டு வங்கி அரசியலால், இது அந்நிய தேசத்திலிருந்து இங்கு ஊடுருவிய மக்களுக்குச் செலவளிக்கப்படுகிறது. நாம் சம்பாதித்து கட்டும் வரி, அடுத்த நாட்டினருக்கு முறைகேடாகக் கொண்டு செல்லப்படுகிறது. 

நகரங்களின் முக்கியமான இடங்களில் உடுருவல்காரர்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து, குடியிருப்பினை உருவாக்கி விடுகின்றனர். அவர்களுக்கு தேசவிரோதிகள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, தங்கள் தேசவிரோத செயல்களுக்கு இந்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தேசப் பாதுகாப்பிற்கு இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். 

அடுத்ததாக, இந்தியா போன்ற ஒரு பரந்த தேசத்தில் ஜனத்தொகை மிகுதியில், இப்படி அடையாளம் இல்லாமல் ஊடுருவி இருப்பவர்களால், தேசத்திற்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கான ஒற்று வேலை செய்ய இது போன்ற அடையாளம் தெரியாதவர்களை எளிதில் பயன்படுத்த முடியும். சுய அடையாளமும், குடும்பமும் இல்லாத ஊரில் ஒரு மனிதன் எந்தவிதக் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருக்க மாட்டான். தன் வக்கிரங்களை மிக இயல்பாக எந்தவொரு தயக்கமும் இல்லாமல் வெளிக்காட்டி விட்டு வேறு இடத்திற்கு மாறி விடுவான்.

முக்கியமாக, அந்நிய ஊடுருவலால், இங்கே இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது. வேலை வாய்ப்புகள் குறையத் தொடங்கினால், அந்த நாட்டில் வன்முறையும், வறுமையும் ஒருங்கே படையெடுத்து நாட்டைச் சீரழித்து விடும்.

இப்படி ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பினைக் காக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க முனைந்ததன் மூலம், உள்துறை அமைச்சகம் என்பது கிட்டத்தட்ட ஒரு பிரதமருக்கு இணையான பொறுப்பினை கொண்டது என்பதை மீண்டும் உறுதி செய்கிறார்.

அந்நிய ஊடுருவல் மற்றும் அதன் ஆபத்தினைக் குறித்து, ஏற்கனவே சுதேசி விழிப்புணர்வு இயக்கம், இந்த ஆண்டு அதன் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதையும், அது குறித்த ஒரு சிறப்புக் கட்டுரை நமது நியூஸ்டிஎம்-ல் வெளியானதையும் வாசகர்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close