உலகின் முதல் வைரக்குவியல் கோல்கொண்டா கோட்டை!

  இளங்கோ   | Last Modified : 24 Jun, 2019 06:51 pm
special-article-about-golconda-fort

உலகில் முதன் முதலாக வைரங்கள்  கண்டெடுக்கப்பட்ட பகுதி எது என்று தெரியுமா? ஐதராபாத் நகரத்தின் மேற்கே அமைந்துள்ள கோல்கொண்டா கோட்டைதான். இவை கோல்கொண்டா  கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. 

கோலா கொண்டா என்பது தெலுங்கு சொல். ஆடு மேய்க்கும் இடையனின் குன்று என்று அர்த்தம். அந்த இடத்தின் பழைய பெயர் மங்களவரம். இப்படித் தான் கோலா கொண்டா என்பது கோல்கொண்டா எனும் பெயர் மாறி சரித்திரம் படைத்தது. இவை மிக அற்புதமான கருங்கல் கோட்டை. முழுக்க முழுக்க கருங்கல்லாலும் பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட மிகப் பிரமாண்டமான கல் ஓவியம். 

கோல்கொண்டா கோட்டை ஒரு மனோரஞ்சிதமான கோட்டை. ஏழு கிலோமீட்டர் சுற்றளவுக்கு சுவர்களை எழுப்பி இருக்கிறார்கள். கோட்டைக்கு உள்ளே ஒரு மாநகரமே இருந்திருக்கிறதாம். இந்த கோட்டை மலை மீது அமைந்துள்ளதால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. 

ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது. இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம். 

கோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் பெரும்பான்மையான அமைப்புகளை நிர்மாணித்த பெருமைக்குரியவராக இப்ராஹீம் குலி குதுப் ஷா வாலி எனும் மன்னர் ஆவார். 

முக்கியமாக வடக்கிலிருந்து முகலாயர்களின் தாக்குதல்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த கோட்டைப்பகுதி எழுப்பப்பட்டுள்ளது. முகலாயர்களிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக கோட்டையின் முன் வாசலின் அருகில் ஒரு சிறு கைத்தட்டல் ஒலி கேட்டால் கூட, 300 அடி உயரம் உள்ள கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலி அமைப்போடு அவர்கள் வடிவமைத்துள்ளார்கள். 

இந்தக்கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. சார்மினார் விதான வாயிலையும் இந்த கோட்டையையும் இணைக்கும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை உள்ளதாகவும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. ரகசிய சுரங்கப்பாதையை மையப்படுத்தி,மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது. உலகத்திலேயே அதிகமாக வைரங்கள் தோண்டி எடுக்கப்பட்டது இந்தக் கோல்கொண்டாவில்தான். 

நுர் உல் அயின் வைரம், கோகினூர் வைரம், கோப் வைரம், ரீஜெண்ட் வைரம் போன்ற உலகப் புகழ்பெற்ற வைரங்கள் இங்கே தோண்டி எடுக்கப்பட்டை என கருதப்படுகிறது. இதனாலே, கோல்கொண்டா நகரம் வைரத்தின் சந்தை நகரமாகவே இருந்தது. வரலாற்று ஏடுகளில் கோல்கொண்டா எப்போதும் நிலைத்து நிற்கும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close