மத்திய பட்ஜெட் 2019 ஹைலைட்ஸ்...

  விசேஷா   | Last Modified : 03 Jul, 2019 04:01 pm
union-budget-2019-highlights

மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, தன் முதல் ஐந்து ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக முடித்து, சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் கடந்துமுறையை விட பிரமாண்ட வெற்றி பெற்று முன்பை விட அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. 

இந்நிலையில், புதிய அரசின் முதல் நிதி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில், அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்ய நிதி பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகளை மீண்டும் ஒரு முறை நினைவு கூறலாம். 

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு , 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானது. 

விவசாயம் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

36 முக்கிய பொருட்களுக்கான சுங்க வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டது. 

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறு விவசாயிகளுக்கும், ஆண்டிற்கு 6,000 ரூபாய் நிதி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டது.  இத்திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னெப்போதும் இல்லாத வகையில், ராணுவத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ரயில்வே துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானது. 

அமைப்பு  சாரா தொழிலாளர்கள் பலனடையும் வகையில், அவர்களுக்கென புதிய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

முத்ரா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் தொழில்முனைவாேருக்கு, 7.3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் முழு வீச்சில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

மீன்வளத்தை மேம்படுத்த அதற்கென தனி அமைச்சகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

தொடரும்....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close