மத்திய பட்ஜெட் 2019 மீள் பார்வை - பகுதி 1

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 04:02 pm
budget-2019-review-part-1

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய திட்டங்கள் குறித்த மீள் பார்வை: 

1) தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

2) வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முழு நடைமுறைகளும், 24 மணி நேரத்திற்குள் முடிக்கும் வகையில் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதாவது, மக்கள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்து, அது சரியா, தவறா என்பது தெரிய, சில நாட்கள் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வரும். 24 மணி நேரத்திற்குள் அந்த நடவடிக்கை முடிக்கப்படும்.

3) இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறை, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, வரி கணக்கு தாக்கல் செய்ய, வருமான வரி அலுவலகங்களுக்காே அல்லது சேவை மையங்களுக்கோ செல்ல வேண்டிய தேவை இருக்காது.

4) பேப்பர் இல்லாமல், டிஜிட்டல் வடிவில், வருமான வரி தாக்கல் செய்யப்படும் முறை முழு வீச்சில் அமலுக்கு வரும். 

5) பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில், 2 லட்சம் இடங்கள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு அதில் இடம் பெற்றது.

6) 36 முக்கிய பொருட்களுக்கான, சுங்க வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

7) வீடுகளின் விலை குறைப்பு நடவடிக்கைக்காக, ரியல் எஸ்டேட் துறையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை குறைப்பது குறித்து பரிந்துரைகள் மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுவதாக அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட் உரையில் அறிவித்தார். 


8) வருமான வரி கணக்கீட்டு முறையில், வழக்கமான கழிவுகள், 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

9) தானே பயன்படுத்தும், இரண்டாவது சொந்த வீட்டிற்கும், வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.

10) டெபாசிட் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டிக்கு பிடித்தம் செய்யப்படும், டி.டி.எஸ்., உச்சவரம்பு, 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 40 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இது போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருந்தன. தற்போது, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான அரசின் பொது பட்ஜெட்டில் இன்னும் பல அம்சங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்தடுத்த பதிவுகளில், இந்த மீள்பார்வையுடன், எதிர் வரும் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் யூகங்கள் குறித்தும் பார்க்கலாம். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close