அழிவுப் பாதையில் விரையும் ஜனநாயகம்!

  பாரதி பித்தன்   | Last Modified : 12 Jul, 2019 10:48 am
special-article-about-karnataka-politics

இந்தியாவின் பெருமையே, வேற்றுமையில் ஒற்றுமைதான். அந்த ஒற்றுமைக்கு இந்தி, இந்துமதம், காங்கிரஸ் கட்சி இவை அனைத்தும் இப்போது சிக்கலில் உள்ளது. இந்தி, இந்துமதம் ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்திற்கு உள்ளது. 

ஆனால் காங்கிரஸ் கட்சியை பாதுகாக்க அவர்களால் மட்டுமே முடியும். அதிலோ, அகில இந்திய தலைமையே வெற்றிடமாக இருக்கிறது. இன்னொருபுறம் பாஜக கடந்த தேர்தலை விட குறைவான இடங்களில் தான் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் பொய்யாக்கி தற்போது 303 இடங்களை கொடுத்து இருக்கிறார்கள்.

மக்களின் எதிர்பாராத இந்த தீர்ப்பு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை ஆட்டம் போடவும், காணவும் வைத்துள்ளன. அதன் விளைவுதான் கர்நாடகாவில் தற்போது நடந்து கொண்டு இருப்பது. இந்த விவகாரத்தில் பாஜக பின்னணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த கட்சியின் பார்வை தங்கள் மீது பட்டால் போதும் என்று நினைப்பவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வருகின்றனர். பெரும்பான்மைக்கு நெருக்கமாக இருந்தால் கூட பாஜக ஆட்சியை பிடிக்க முடியாத அவலம் இங்கு .

இது போன்ற சூழ்நிலை கோவா மாநிலத்திலும் தோன்றி இருக்கிறது. தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து 10 எம்எல்ஏகள் வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி தானே கவிழும் என்ற பேச்சு வலம் வருகிறது. இப்படி நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி  நழுவி பாஜக ஆட்சி அரங்கேறுகிறது. கடந்த காலங்களில் 356 பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கைவந்த கலையாக காங்கிரஸ் கட்சி செய்தது. கருணாநிதி உட்பட பல மாநில முதல்வர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட காங்கிரஸ் தான் காரணமாக இருந்தது. அந்த காலகட்டங்களில் மத்தியிலும், ஒரு சில மாநிலங்களிலும் மட்டும் அக்கட்சி ஆட்சி செய்தது.

ஆனால் இன்று பாஜக எல்லா மாநிலங்களிலும் தன் காலடியை பதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், எஞ்சியிருக்கும் மாநிலங்களில் ஆட்சியை தக்கவைக்கவும், கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலுக்கு முடிவு கட்டவும்,  காங்கிரஸ் கட்சி உடனடியாக அகில இந்திய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.அதை அவர்கள் செய்வார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாகவே உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close