சர்வதேச புலிகள் தினம் இன்று!

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2019 06:31 pm
international-tigers-day

இந்த பூமியில் வாழ, மனித இனத்திற்கு எத்தனை உரிமை உள்ளதோ, அது போலவே அனைத்து உயிரினங்களுக்கும் வாழ உரிமை உண்டு. அந்த வகையில், பல்வேறு காரணங்களால் காடுகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. அதனால், அங்கு வசிக்கும் விலங்கினங்களின் உயிர் பெருக்கத்தில் சரிவு ஏற்படுகிறது. 

குறிப்பாக, அடர்ந்த காட்டுப்பகுதிகளில் மட்டுமே வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை, சில ஆண்டுகளுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் வெகுவாக குறைந்தது. இது, மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, புலிகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

அது மட்டுமின்றி, அவற்றின் இனப் பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தரும் முயற்சிகளும் வனத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. 2014ம் ஆண்டு இந்த முயற்சிகள் துவங்கப்பட்டது. அப்போது, நம் நாட்டில், 2,226 புலிகள் இருந்தன.

இந்த எண்ணிக்கை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாய், நான்கு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, நம் நாட்டில் மாெத்தம், 2,967 புலிகள் இருப்பதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச புலிகள் தினமான இன்று, இது குறித்த தகவல் அறிக்கையை, பிரதமர் நரேந்திர மாேடி வெளியிட்டார். இது, இயற்கை ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close