பாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி!

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 04:16 pm
special-article-about-arun-jaitley-2

இளம் வயதிலேயே கூர்மையான அறிவுடனும், அசாத்திய துணிச்சலுடனும் காணப்பட்ட ஜெட்லி, பாரத பிரதமர்களின் செல்ல பிள்ளையாகவே திகழ்ந்து வந்துள்ளார். வி பி சிங் பிரதமராக இருந்தபோது, மிக இளைஞராக இருந்த ஜெட்லியை மத்திய வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். 

எனினும், கட்சியில் தன்னை விட சீனியர்கள் பலர் இருப்பதாகவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும்படியும் கூறி தனக்கு வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார். அதன் பின் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணிக்காக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 

டெல்லி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அவர், பல்வேறு முக்கிய வழக்குகளை மிக சாதுரியமாக கையாண்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணைஅமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், மிக குறுகிய காலத்தில் கேபினட் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 

தொழில்துறை, கப்பல் போக்குவரத்து, நிறுவனங்கள் விவகாரத்துறை, சட்டம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்த ஜெட்லி, பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதி, பாதுகாப்பு, தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தார். அதிக முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்களில் ஐவரும் ஒருவர். 

உடல் நலம் கருதி, இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என அவரே கூறியதால் தான் பிரதமர் மோடி அதை ஏற்று அவரை ஓய்வெடுக்க அனுமதிதத்தார். அந்த அளவுக்கு அரசியல் அனுபவமும், நிர்வாக திறமையும் கொண்டிருந்தார் அருண் ஜெட்லி. 

பார்லிமென்டில் அவர் ஆற்றிய முக்கிய பணிகள் குறித்து அடுத்த கட்டுரையில் காணலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close